வாங்கிய அரிசி மூட்டைக்குள் அள்ள அள்ள பணம்.. கடலூர் பெண்ணுக்கு காசு மழை.. பின்னாடியே செம்ம ட்விஸ்ட்
கடலூர்: கடலூர் மாவட்டம் வடலூரில் அரிசி மூட்டையில் வியாபாரி சண்முகம் என்பவர் பணத்தை அரிசி மூட்டையில் பதுக்கி உள்ளார். இதை பற்றி தெரியாமல் அரிசி மூட்டையை மைத்துனர் விற்றுள்ளார். இதைகேட்டு தலையில் அடித்துக்கொண்ட சண்முகம், அந்த அரிசி மூட்டையில் ரூ.15 லட்சத்தை பதுக்கி வைத்திருந்ததாக கூறினார். இதனிடையே அரிசி மூட்டையில் ரூ.10 லட்சம் இருந்ததாக பெண் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பணத்தை பலர் விதவிதமாக பதுக்கி வைப்பார்கள். வருமானவரித்துறை பயந்து சிலர் பதுக்கிவைப்பார்கள். சிலர் திருடர்களுக்கு பயந்து பீரோவிற்கு பதில் வேறு இடங்களில் பணம் மற்றும் நகைகளை பதுக்கிவைப்பார்கள். சிலர் சேலைக்கு அடியிலும், சிலர் சமையலறையில் உள்ள டப்பாக்களிலும், சிலர் கழிவறையிலும், சிலர் ரகசிய அறை வைத்தும் பணத்தை பதுக்குவார்கள். இந்நிலையில் கடலூர் மாவட்டம் வடலூரில் அரிசி கடை நடத்தும் ஒருவர் பணத்தை அரிசி மூட்டைக்குள் பதுக்கி உள்ளார். அப்படி பதுக்கிய பணத்தை அவர் பறிகொடுத்துள்ளார். அதனை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

கடலூர் மாவட்டம் வடலூர் ராகவேந்திரா சிட்டியில் வசிக்கும் 40 வயதாகும் சண்முகம்(வயது 40) அரிசி வியாபாரியாவார். இவரது மைத்துனர் சீனிவாசன், அரிசி கடையில் இருந்துள்ளார். அப்போது மந்தாரக்குப்பம் அருகே மேல்பாதி கிராமத்தை சேர்ந்த பூபாலன்(62) என்பவர் அரிசி வாங்க வந்திருக்கிறார். அவர் கேட்டதன் பேரில் ஒரு மூட்டை அரிசி சிப்பத்தை சீனிவாசன் விற்பனை செய்தார். இதற்கிடையில் சில மணி நேரத்திற்கு பிறகு சண்முகம் கடைக்கு வந்தார். அங்கு பணத்துடன் இருந்த குறிப்பிட்ட அரிசி மூட்டை இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மேலும் அவர், அந்த அரிசி மூட்டை எங்கே? என்று சீனிவாசனிடம் கேட்டார். அதற்கு அவர், வழக்கமாக நமது கடையில் அரிசி வாங்கும் பூபாலனிடம் மூட்டையை விற்பனை செய்தேன் என்று கூறியிருக்கிறார். இதை கேட்டு தலையில் அடித்துக் கொண்ட அலறிய சண்முகம், அந்த அரிசி மூட்டையில் ரூ.15 லட்சத்தை பதுக்கி வைத்திருந்ததாக கூறியிருக்கிறார்.
இதைக்கேட்டு சீனிவாசன் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து உடனடியாக 2 பேரும் பூபாலன் வீட்டிற்கு சென்று பார்த்த போது அரிசி மூட்டை பிரிக்கப்பட்டு இருந்தது. வீட்டில் இருந்த பூபாலனின் மகள் தாட்சாயினியிடம், இந்த மூட்டையில் ரூ.15 லட்சம் வைத்திருந்ததாகவும், அதை கொடுக்குமாறும் சண்முகம் கூறினார். அதற்கு தாட்சாயினி, அரிசி மூட்டையில் வெறும் ரூ.10 லட்சம் மட்டும் தான் இருந்ததாக கூறி அந்த பணத்தை கொடுத்தார்.
அந்த பணத்தை பெற்றுக்கொண்ட சண்முகம், மீதமுள்ள ரூ.5 லட்சத்தை எங்கே என்று கேட்டு தாட்சாயினியிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். பதிலுக்கு அவரும் வாக்குவாதம் செய்ததார். பின்னர் 2 பேரும் அங்கிருந்து சென்று விட்டார். இது குறித்து புகாரின் பேரில் வடலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications