Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பார்த்தாலே கடுப்பு.. காட்டுமன்னார்கோயில் கணவர் செய்த வேலை.. கடலூர் சினேகாவுக்கு இப்படியொரு நிலைமை

Subscribe to Oneindia Tamil

கடலூர்: தமிழகத்தில் நாளுக்கு நாள் குடும்ப வன்முறைகள் பெருகிவருவதாக நீதிமன்றங்கள் தொடர்ந்து கவலை தெரிவித்து வருகின்றன.. இப்படிப்பட்ட சூழலில், கடலூர் மாவட்டத்தில் தம்பதிக்குள் நடந்த சம்பவம், மேலும் வருத்தத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.. அதிலும்,. காட்டுமன்னார்கோவில் பகுதி மக்கள், இந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் உள்ளனர்..

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள மேலபழஞ்சநல்லூரை சேர்ந்தவர் அய்யப்பன்... இவரது மகன் விக்னேஷூக்கு 25 வயதாகிறது. அதே பகுதியில் ஆயில் மில் ஒன்றை சொந்தமாக வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு10 மாதத்துக்கு முன்பு தான் திருமணம் நடந்தது.. மனைவி சினேகாவுக்கு 24 வயது ஆகிறது.

Cuddalore Kattumannarkoil Oil Milk

தம்பதிக்குள் தகராறு

கல்யாணம் ஆனதிலிருந்தே , கணவன் - மனைவிக்குள் இணக்கமான சூழல் காணப்படவில்லை என்றும், நிறைய தகராறுகள் இவர்களுக்குள் வந்துபோனதாகவும் தெரிகிறது.. இப்படிப்பட்ட சூழ்நிலையில், கடந்த 25ம் தேதி மாலை, வீட்டில் தூங்கி கொண்டிருந்தாராம் விக்னேஷ்.. அப்போது சினேகா கணவரை தட்டி எழுப்பினாராம். இதனால், விக்னேஷூக்கு கோபம் அதிகமாகி, வீட்டில் பெயின்ட் அடிக்க பயன்படுத்தப்படும் தின்னரை கொண்டு வந்து, சினேகாவின் மீது ஊற்றி, தீவைத்தும் எரித்துள்ளார்..

உடம்பெல்லாம் தீ பரவிய அதிர்ச்சியில், அலறிய சினேகா, ஓடிப்போய் கணவரை பதற்றத்தில் கட்டிப்பிடித்துள்ளார்.. இதில் விக்னேஷ் உடம்பிலும் நெருப்பு பற்றிக்கொண்டது.. உடனே விக்னேஷ் பீதியில் அங்கிருந்து வெளியே கதறிகொண்டே ஓடினார்.

அலறல் சத்தம்

பிறகுதான், இவர்கள் 2 பேரின் சத்தத்தை கேட்டு, அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து இருவரையுமே மீட்டு காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதில், லேசான தீக்காயம் அடைந்த விக்னேஷ் சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சினேகா மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சினேகாவுக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

சினேகாவுக்கு நடந்த பரிதாபம்

இந்த சம்பவம் குறித்து, காட்டுமன்னார்கோவில் போலீசில் சினேகாவின் தாய்மாமன் ராஜீவ் காந்தி புகார் செய்தார். போலீஸாரும் வழக்கு பதிவு செய்து செய்து விசாரணையை மேற்கொண்டு வந்தனர்..

இந்த நிலையில் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சினேகா பலனின்றி பரிதாபமாக இறந்துவிட்டார்.. இதையடுத்து கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றிப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தூக்கத்தில் இருந்து எழுப்பியதற்காக மனைவியை கணவன் தீ வைத்து கொளுத்தி கொன்றுள்ளது கடலூரை கலங்கடித்து வருகிறது.

காட்டுமன்னார்கோவில் போலீசில் சினேகாவின் தாய்மாமன் ராஜீவ் காந்தி புகார் செய்தார். தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சினேகா பலனின்றி பரிதாபமாக இறந்துவிட்டார்.. இதையடுத்து கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றிப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தூக்கத்தில் இருந்து எழுப்பியதற்காக மனைவியை கணவன் தீ வைத்து கொளுத்தி கொன்றுள்ளது கடலூரை கலங்கடித்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+