முரசா? பம்பரமா? தேமுதிக வேட்பாளருக்கு பம்பரத்தில் ஓட்டு கேட்ட சிவி சண்முகம்! சமாளித்தது தான் ஹைலைட்
கடலூர்: அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளருக்கு பம்பரம் சின்னத்தில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் ஓட்டு கேட்ட வீடியோ வெளியாகி உள்ளது. முரசு சின்னத்துக்கு பதில் பம்பரத்தில் ஓட்டு கேட்டதாக நிர்வாகி ஒருவர் சுட்டிக்காட்டிய நிலையில் சிவி சண்முகம் சமாளித்தது தான் ஹைலைட்டாக அமைந்தது.
தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியில் மறைந்த நடிகர் விஜயகாந்தின் தேமுதிக கட்சி உள்ளது. தேமுதிகவுக்கு மொத்தம் 4 லோக்சபா தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மத்திய சென்னை, விருதுநகர் திருவள்ளூர் (தனி), கடலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட தொகுதிகளில் அதிமுக கூட்டணியில் தேமுதிக போட்டியிடுகிறது.
இதில் விருதுநகர் தொகுதியில் நடிகர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகர் போட்டியிடுகிறார். மத்திய சென்னையில் பார்த்தசாரதி, திருவள்ளூர் (தனி) தொகுதியில் நல்லதம்பி, கடலூரில் சிவக்கொழுந்து, தஞ்சாவூரில் சிவநேசன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் தான் கடலூரில் தேமுதிக சார்பில் போட்டியிடும் சிவக்கொழுந்துக்கு ஆதரவாக அதிமுக-தேமுதிக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
கடலூர் நாடாளுமன்ற தொகதியில் அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளராக நன்கு அறிமுகம் ஆன சிவக்கொழுந்து போட்டியிடுகிறார்.
அனைவராலும் மதிக்கப்படுபவர். எளிமையான நபர். இந்த பகுதியில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். தேமுதிகவில் விஜயகாந்த் ரசிகராக இருந்து பண்ருட்டி எம்எல்ஏவானவர். அதற்கு முன்பு எம்ஜிஆர் ரசிகராகவும், ஜெயலலிதா ரசிகராகவும் இருந்தவர். ஒருங்கிணைந்த கடலூர் மாவட்டத்தில் மாவட்ட கழக செயலாளராக பணியாற்றியவர்.
அதிமுகவில் சாதாரண தொண்டர் கூட உச்சப்பட்ட பதவியில் உட்கார முடியும். அந்த வகையில் நம்மை போன்ற சாதாரண தொண்டரை இன்றைக்கு தேமுதிக பொதுச்செயலாளர், வேட்பாளராக அறிவித்துள்ளார். அவருடைய சின்னம் பம்பரம் சின்னம்'' என்றார். இந்த வேளையில் நிர்வாகி ஒருவர் சின்னத்தை தவறாக கூறியதாக சிவி சண்முகத்தில் காதில் கூறினார்.
இதையடுத்து சுதாரித்து கொண்ட சிவி சண்முகம், ‛‛சாரி, மன்னித்துவிடங்கள். சின்னத்தை தவறாக சொல்லிவிட்டேன். டிவி பார்த்துகிட்டே இருந்தேன். நீதிமன்றத்தில் இன்று ஒரு கட்சிக்கு (மறைமுகமாக மதிமுகவை குறிப்பிட்டு) அடிமேல் அடி விழுந்து கொண்டே இருந்தது. அந்த ஞாபகத்தில் கூறிவிட்டேன். நம்முடைய வேட்பாளர் முரசு சின்னத்தில் நிற்கிறார். முரசு சின்னம்.. முரசு சின்னம்.. முரசு சின்னம்..'' எனக்கூறி சமாளித்தார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications