Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஏற்கனவே நாலு.. 5வது வேற.. களியாட்டம் நடத்திய கடலூர் சீனு.. பாய்ந்தது வழக்கு!

5 பெண்களை மணந்த மோசடி நபர் மீது போலீசில் புகார் தரப்பட்டுள்ளது

Subscribe to Oneindia Tamil

கடலூர்: 5 பெண்களை மணந்து, மோசடி செய்த கணவன் மீது 4வது மனைவி போலீசில் புகார் தந்துள்ள சம்பவம் பரபரப்பை கூட்டி வருகிறது.

கடலூர் மாவட்டம் மேலகுப்பம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் காயத்ரி.. 35 வயதாகிறது.. இவர் புதுச்சேரி அனைத்து மகளிர் போலீஸில் புகார் ஒன்றை தர வந்திருந்தார்.. கையில் தன்னுடைய குழந்தையை தூக்கிக் கொண்டு வந்திருந்தார்.

அந்த புகார் மனுவில், புதுவை மாநிலம் அரியாங்குப்பத்தை சேர்ந்தவர் சீனு என்கிற தெய்வநாயகம்.. வயது 42. அவருடன் கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 2-ந் தேதியன்று புதுச்சேரி பிருந்தாவனத்தில் உள்ள பிள்ளையார் கோவிலில் 2 வீட்டார் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.

திருமணத்தின்போது வரதட்சணையாக 6 பவுன் நகையும், பைக் உள்ளிட்ட பொருட்களும் வழங்கப்பட்டன.. 3 மாதங்கள் மட்டுமே நாங்கள் 2 பேரும் ஒன்றாக வாழ்ந்து வந்தோம்.

கர்ப்பம்

கர்ப்பம்

இதற்கிடையே நான் கர்ப்பமானேன்... அப்போது என்னுடைய கணவர் தெய்வநாயகம் கூடுதல் வரதட்சணை கேட்டு என்னை கொடுமைப்படுத்தி வந்தார்... இதனால் அவரிடம் கோபித்துக் கொண்டு நான் கடலூரில் உள்ள என்னுடைய அம்மா வீட்டுக்கு சென்றுவிட்டேன். இப்போது எனக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. கணவர் என்னை வந்து பார்க்கவில்லை.. என்னிடம் பேசவும் இல்லை. இதனால் சந்தேகம் அடைந்த நான் அவரை தொடர்பு கொள்ள முயற்சி செய்தபோது, நீ எனக்கு மனைவியே இல்லை என்று என்னை உதாசீனப்படுத்தினார்.

 கல்யாண மன்னன்

கல்யாண மன்னன்

இதனால் சந்தேகமடைந்த நான், அவரை பற்றி விசாரித்தேன்.. அப்போதுதான், அவர் ஏற்கனவே அனிதா, தேவி, கனகவல்லி என 3 பெண்களை திருமணம் செய்தது தெரியவந்தது. 4-வதாக என்னை திருமணம் செய்துள்ளார். இப்போது 5-வதாக வம்பாகீரப்பாளையத்தை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்ததாக தெரிகிறது. என்னை திருமணம் செய்யும்போது முதலாவது திருமணம் செய்த அனிதாவுக்கும், தனக்கும் விவாகரத்து ஆகி விட்டது என்று மட்டுமே சொன்னார்.. ஆனால் அவர்களுக்கு விவாகரத்து ஆகவில்லை.

லாட்டரி

லாட்டரி

இதனால் அதிர்ச்சியடைந்த நான் அவரை சந்தித்து இதுபற்றி கேட்டேன்.. அதற்கு என்னை மிரட்டினார். மேலும் அடியாட்களை வைத்து கொலை செய்யவும் திட்டமிட்டுள்ளதை அறிந்தேன். தெய்வநாயகம் மீது லாட்டரி சீட்டு விற்பனை செய்த வழக்கும் நிலுவையில் உள்ளது. அதனால், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த புகார் மனு குறித்து புதுச்சேரி அனைத்து மகளிர் போலீசார் விசாரிக்க போவதாக கூறப்படுகிறது.. புதுச்சேரி, கடலூரில் ஒருவருக்கு தெரியாமல் ஒருவரை என 5 பெண்களை திருமணம் செய்துள்ளார்.

 காயத்ரி

காயத்ரி

4-வது மனைவிக்கு கொலைமிரட்டல் விடுத்ததன் மூலம் கல்யாணராமனின் திருமண லீலைகளும் அம்பலமாகி அதிர்ச்சியை கூட்டி வருகின்றன.. இதில் முதல் மனைவி பெயர் அனிதா என்கிற இந்திர குமாரி, இரண்டாவது மனைவி தேவி அரியாங்குப்பத்திலும், மூன்றாவது மனைவி கனகவல்லி என்பவரையும் சீனு திருமணம் செய்துள்ளார்.. பிரசவத்துக்கு 4வது மனைவி காயத்திரி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதுதான், புதுச்சேரி பிரேமா என்கிற பிரபாவதி என்பவரையும் ஐந்தாவதாக திருமணம் செய்துள்ளது தெரியவந்தது.

புரோக்கர்

புரோக்கர்

அதுமட்டுமல்ல, சீனு தன்னை ஒரு நிலத்தரகர் என்று சொல்லியே அனைவரையும் திருமணம் செய்தாராம்.. ஆனால் எந்த வேலைக்கும் போகாமலேயே இருந்துள்ளார்.. எல்லாவற்றிற்கும் மேலாக, தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையை இவர் ரகசியமாக செய்து வந்துள்ளதும் தெரியவந்தது. சீனு செய்த அத்தனை மோசடிக்கும் ஆதாரங்களை காயத்ரி போலீசில் தந்துள்ளார்.. அதுமட்டுமல்ல, இது தொடர்பாக காயத்ரி வெளியிட்டுள்ள வீடியோ மற்றும் ஆடியோ பதிவுகள் சோஷியல் மீடியாவிலும் வைரலாகி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+