கடலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சாப்பாடு எல்லாம் குடுத்தாங்களா... பாசத்தோடு கேட்ட முதல்வர்... நெகிழ்ந்த முதியவர்

சாப்பாடு கொடுத்தாங்களா? உடம்பு எப்படி இருக்கிறது டாக்டர் கிட்ட செக் பண்ணிக்கங்க என்று முதியவர் ஒருவரிடம் முதல்வர் பழனிச்சாமி பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.

Google Oneindia Tamil News

கடலூர்: உடம்பு பரவாயில்லையா? கால் வலிக்குதா? கை வலிக்குதா என்று முதியவர் ஒருவரிடம் முதல்வர் பழனிச்சாமி கனிவோடு விசாரித்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நிவர் புயல் ஆடிய கோரத்தாண்டவத்திற்கு அதிகம் பாதிக்கப்பட்டது கடலூர் மாவட்டம்தான். கண்ணுக்கு கண்ணாக வளர்த்து அறுவடைக்கு தயாராக இருந்த கரும்பும், வாழையும் நிவர் புயலின் கோபத்திற்கு ஆளாகி அடியோடு சாய்ந்து விட்டது.

Did you eat ... Chief Minister Edapadi Palanisamy asks old man in relief camp

விவசாயிகள் கண்ணீர் கடலில் மூழ்கியிருக்கின்றனர். நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வசித்தவர்கள் முன்னெச்சரிக்கையாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கடலூரை சூறையாடிய நிவர்... களத்திற்கு சென்று துயர் துடைத்த முதல்வர் பழனிச்சாமிகடலூரை சூறையாடிய நிவர்... களத்திற்கு சென்று துயர் துடைத்த முதல்வர் பழனிச்சாமி

கடலூர் சென்ற முதல்வர் பழனிச்சாமி விவசாயிகளின் வேதனைகளை பரிவோடு கேட்டறிந்தார். பயிர் சேதம் கணக்கிடப்படுவதாகவும் கூறினார். நிவாரண முகாமில் தங்கியிருந்தவர்களை பார்த்து பேசிய முதல்வர் பழனிச்சாமி, "சாப்பாடெல்லாம் கொடுத்தாங்களா? டாக்டர் எல்லாம் வந்திருக்காங்க உடம்பை நல்லா செக் பண்ணிக்கங்க என்று சொன்னார். அதற்கு அந்த முதியவர் தனக்கு கை வலிப்பதாக கூறவே, அவரது கைகளை தொட்டு கை வலி, கால் வலி முட்டி வலியா என்று பரிவோடு விசாரித்தார்.

முதல்வர் நேரில் வந்து தன்னை தொட்டு தடவி விசாரித்தது கண்டு அந்த முதியவர் நெகிழ்ந்துதான் போனார். இந்த வீடியோவை அதிமுக ஐடி பிரிவினர் வைரலாக்கி வருகின்றனர்.

English summary
Video footage of Chief Minister Palaniasamy gently asking an elderly man if his hand hurts has gone viral on social media. The old man was moved when he saw the chief come in person and touch and interrogate him.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X