Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாடிபில்டர் உயிரிழக்க என்ன காரணம்? மருத்துவர் விளக்கம்.. கவனமாக இருக்க வேண்டியவர்கள் யார் யார்?

கடலூர் மாவட்டம் வடலூரில் ஆணழகன் போட்டியில் இளைஞர் உயிரிழக்க என்ன காணரம் என்று மருத்துவர் விளக்கம் அளித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

கடலூர்: கடலூர் மாவட்டம், வடலூரில் ஆணழகன் போட்டியில் கலந்துகொண்ட ஹரிகரன் என்ற 21 வயது இளைஞர் வார்ம் அப் செய்த போது திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்தார். இதற்கு என்ன காரணம் என்று மருத்துவர் சுபத்ரா என்பவர் பிரபல தமிழ் ஊடகம் ஓன்றுக்கு பேட்டி அளித்த போது விளக்கம் அளித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் வடலூர் ராஜராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் தமிழ்நாடு மாநில அளவிலான ஆணழகன் போட்டி நேற்று நடைபெற்றது.. வடலூரில் உள்ள பிசிகோ பிட்னஸ் சார்பில் இந்த போட்டி நடந்தது. இதில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 600-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர்.

இதில் பங்கேற்பதற்காக சேலம் பெரிய கொல்லப்பட்டி, மாரியம்மன் கோயில் தெரு மாதையன் மகன் ஹரிஹரன் (வயது 21) என்பவர் வந்திருந்தார். 75 கிலோ எடை பிரிவில் மேடை ஏற தயாராக ஹரிஹரன், மேடை ஏறுவதற்கு முன்பு மண்டபத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டார். பயிற்சியின் விக்கல் வந்து மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் திடீரென மயக்கம் ஏற்பட்டு அதே இடத்திலேயே சுருண்டு விழுந்திருக்கிறார்.

வழியில் உயிரிழப்பு

வழியில் உயிரிழப்பு

அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக இளைஞர்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் தெரிவித்தனர். அவரை உடனடியாக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவனைக்கு இளைஞர் ஹரிகரனை விழாக்குழுவினர் கொண்டு சென்றார்கள். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டார் என்று தெரிவித்தனர். ஹரிகரனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டோ அல்லது மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்திருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

உடற்பயிற்சி காரணமா?

உடற்பயிற்சி காரணமா?

ஹரிகரனின் உடல் உடற்கூறாய்வு பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து வழக்கு பதிவுசெய்த வடலூர் போலீஸார் விசாரணையை நடத்தி வருகின்றனர். ஹரிஹரன் போட்டியில் பங்கேற்பதற்காக அளவுக்கதிகமாக உடற்பயிற்சி மேற்கொண்டதால் உயிரிழந்தாரா, அல்லது உணவு கட்டுப்பாடுடன் உடற்பயிற்சி செய்ததால் உயிரிழந்தாரா என்பது உறுதியாக தெரியவில்லை.

மாரடைப்பு ஏன்?

மாரடைப்பு ஏன்?

இந்நிலையில் பொதுநல மருத்துவர் சுபத்ரா என்பவர் பிரபல தமிழ் ஊடகம் ஓன்றுக்கு அளித்த பேட்டியில், கடலூர் மாவட்டம் வடலூரில் நடந்த ஆணழகன் போட்டியில் 21 வயது நிரம்பிய இளைஞர் ஒருவர் பங்கேற்றார். போட்டியில் கலந்து கொள்வதற்கு அரைமணி நேரத்திற்கு முன்பு வார்ம் அப் செய்து கொண்டிருந்த போது, திடிரென மயக்கம் அடைந்து உயிரிழந்தார். அதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்று பார்த்தீங்கன்னா. பொதுவாக 35 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் இந்த மாதிரி மயக்கம் அடைந்து உயிரிழக்கிறார்கள் என்றால், அதை நாம் மாரடைப்பு வந்து இறந்துட்டாங்க என்று சொல்வோம். மாரடைப்பு என்று தமிழில் நாம் சொல்கிறோம்.

எப்படி ஏற்படுகிறது

எப்படி ஏற்படுகிறது

ஆனால் இதை மருத்துவ ரீதியாக சொல்வது என்றால், ஹார்டியாக் அரித்மியாஸ் என்று சொல்வோம். 35 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு பொதுவாக வருவது. இதயம் சீராக ஒரு நிமிடத்திற்கு 60 முதல் 100 தடவை துடிப்பதாக இருக்கும். அதுவும் இப்படித்தான் துடிக்க வேண்டும் என்பதும் இருக்கும். ஆனால் அப்படி இல்லாமல் இதயதுடிப்பு 100க்கும் மேல் அதாவது 200, 300 என்கிற அளவிற்கு போனால், இதயத்தில் இருந்து மற்ற உறுப்புகளுக்கு செல்லும் ரத்தமும், மற்ற உறுப்புகளில் இருந்து இதயத்திற்கு வரும் ரத்தமும் அடைபட செய்யும். இதனால் சட்டென இதயம் நிற்பதற்காக வாய்ப்பு ஏற்படும். இதைத்தான் சட்டென கார்டியாக் அரெஸ்ட் என்று சொல்வோம்.

கவனமாக இருக்க வேண்டியவர்கள்

கவனமாக இருக்க வேண்டியவர்கள்

அதிகமான உடற்பயிற்சியோ அல்லது அதிகமான மனஅழுத்தமோ ஏற்படும் போது, இதயத்திற்கு வரக்கூடிய ரத்தக்குழாய் வெடிப்பதற்கும் காரணமாக இருக்கலாம். அதுவும் பரம்பரை பரம்பரையாக வரக்கூடிய தொந்தரவாக இருக்கலாம். இந்த மாதிரி உடனடியாக ஹார்டியாக் அரஸ்ட் ஏற்படுவதை எப்படி தெரிந்து கொள்ளலாம் என்றால், அடிக்கடி மயக்கம் வருவது, அல்லது நடக்கும் போது தடுமாற்றம் ஏற்படுவது, சடனாக கண்பார்வை மங்கி போய் வருவது, நமக்குள் பதற்ற நிலை ஏற்படுவது, படபடப்பாக வருவது போன்ற தொந்தரவுகளில் ஏதேனும் வந்தால் உடனே சடென் கார்டியாக் அரெஸ்ட் வரலாம். 45 வயதுக்கு கீழ் மாரடைப்பு ஏற்பட்டு இதுபோல் இளம் வயதில் ஏற்கனவே அவர்கள் குடும்பத்தில் அல்லது பரம்பரையில் இறந்திருந்தால், அவர்களுக்கு அப்படியான மாரடைப்பு வருவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே அவர்கள் தங்களுக்கு இந்த மாதிரியான அறிகுறிகள் தெரிகிறது என்றால், அல்லது அதற்கு முன்பே இதயமருத்துவரை இசிஜி எடுத்து பார்த்தால் ஹார்டியாக் அரித்மியாஸ் வருவதற்கு அறிகுறி இருக்கிறதா என்பதை கண்டுபிடித்துவிடலாம்.

இதயதுடிப்பு சீர் இல்லை

இதயதுடிப்பு சீர் இல்லை

45 வயதுக்கு கீழ் மாரடைப்பு ஏற்பட்டு இதுபோல் இளம் வயதில் ஏற்கனவே அவர்கள் குடும்பத்தில் அல்லது பரம்பரையில் இறந்திருந்தால், அவர்கள் குடும்பத்தினர் கடினமான வேலைகளை செய்யக்கூடாது. உடல் ரீதியாக மட்டுமின்றி, மனரீதியாகவும் கடினமான விஷயங்களை மேற்கொள்ளக்கூடாது- அப்படி செய்தால் உடனடி மாரடைப்பு வர வாய்ப்பு உள்ளது. வடலூரில் ஆணழகன் போட்டியில் கலந்துகொண்ட இளைஞருக்கு திடீரென இதயத்துடிப்பு சீர் இல்லாமல் போனதால் ஹார்டியாக் அரித்மியாஸ் ஏற்பட்டு மரணம் ஏற்பட்டிருக்கலாம் அல்லது இதயம் வீக்கமாகி உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம்" இவ்வாறு மருத்துவர் சுபத்ரா தமிழ் செய்தி ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+