Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கடலூர் ஆணவக்கொலை வழக்கு.. 4 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை.. காதல் மனைவியை கணவனே கொன்ற கொடூரம்!

Subscribe to Oneindia Tamil

கடலூர்: கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே 2014ஆம் ஆண்டு நடந்த ஆணவக் கொலை வழக்கில் 4 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காதல் விவகாரத்தால் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான உயிர்கள் பறிபோகின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் சாதி ஆணவக்கொலைகள் உள்ளன. தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியா முழுக்க, சாதி ஆணவக் கொலைகளின் அக்கிரமம் அடங்கியபாடில்லை.

Double life imprisonment for 4 persons including husband in honour killing case

சாதி ஆணவக்கொலை வழக்குகளில், குற்றம் புரிந்தவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டு வரும் நிலையிலும், சாதி ஆணவக்கொலைகளுக்கு இன்னும் முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை. தமிழ்நாட்டில் சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்கும் வகையில் தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டும் என்ற குரல்கள் ஓங்கி ஒலித்து வருகின்றன.

தமிழ்நாட்டில் நிகழ்ந்த ஆணவக்கொலைகள் பல, நாட்டையே உலுக்கி இருக்கின்றன. ஆணவக்கொலைகளில், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஆணை காதலித்து திருமணம் செய்து கொண்டதற்காக, சாதி ஆதிக்கத் திமிருடன் பெண்ணைப் பெற்றவர்கள் காதலர்களை கொல்லும் நிகழ்வுகள் ஏராளம்.

Double life imprisonment for 4 persons including husband in honour killing case

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே நிகழ்ந்தது வேறு வகை. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சீதாவை சரவணன் என்பவர் காதல் திருமணம் செய்தார். இந்த திருமணத்திற்கு சரவணனின் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து சீதாவை அவரது வீட்டுக்கு செல்லும்படி கணவர் சரவணனே கட்டாயப்படுத்தினார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்ட சீதாவை, அவரது கணவரான சரவணன், அவரது தாய் வீட்டுக்குச் செல்லும்படி கட்டாயப்படுத்தினார். ஆனால், சீதா செல்ல மறுக்கவே, சரவணன் அவரது தாயார், சகோதரி, சகோதரியின் கணவர் பெண்ணை அடித்துக் கடுமையாக தாக்கி கொலை செய்து உடலையும் எரித்தனர்.

Double life imprisonment for 4 persons including husband in honour killing case

இந்தக் கொடூரக் கொலை தொடர்பாக சீதாவின் கணவர் சரவணன் கணவரின் தாயார், சகோதரி, சகோதரியின் கணவர் என 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கடலூர் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் கைதான 4 பேருக்கும் இரட்டை ஆயுள் விதிக்கப்பட்டு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+