முதலமைச்சர் ஸ்டாலின் படத்துடன்.. ஆளுநர் ரவியிடம் பட்டம் பெற்ற மாணவர்! அண்ணாமலை பல்கலையில் சலசலப்பு
Subscribe to Oneindia Tamil
கடலூர்: அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் 87வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. பல்கலைக்கழகத்தின் வேந்தர் என்கிற முறையில், விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று மாணவர்களுக்கு பட்டமளித்தார். அப்போது மாணவர் ஒருவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படத்துடன், ஆளுநரிடமிருந்து பட்டத்தை வாங்கியிருக்கிறார். இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகி வருகிறது.
ஏற்கெனவே, நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில், பட்டமளிப்பு விழாவில் ஆளுநரிடமிருந்து பட்டம் பெற மாணவி ஒருவர் மறுத்திருந்த சம்பவம் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியிருந்தது. இப்படி இருக்கையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படத்துடன் மாணவன் பட்டம் பெற்றிருப்பது பேசு பொருளாகியுள்ளது.













Click it and Unblock the Notifications