கடலூரே கடலானது.. விழுப்புரத்தில் மூழ்கிய பயிர்.. மழை பாதிப்பில் மாவட்டங்கள்.. முதல்வர் இன்று ஆலோசனை
சென்னை: தமிழகத்தில் மழை பாதிப்பு காரணமாக, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மிகப்பெரிய அளவில் பாதிப்பை சந்தித்திருக்கின்றன.. மழை பாதிப்பு மற்றும் மீட்பு பணிகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது
புயலின் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது.. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பொழிவு அதிகமாக இருந்தது.

கடலூர்: இதில், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில், அதிக கனமழை பெய்தது. இதன்காரணமாக, மேற்கண்ட மாவட்ட மக்கள் பெருத்த சிரமத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள்.. இந்த மாவட்டத்தின் பெருமளவு பகுதிகள் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், இந்த மழை வெள்ளத்தால், மாவட்டங்களில் உள்ள முக்கிய ஆறுகள், ஏரிகள் உள்ளிட்டவை நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் வெள்ளம் இன்னும் அதிகமாக ஏற்பட்டு, மக்கள் அதிக சிரமத்திற்குள்ளாகி, அவர்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களிலும் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது..
திருவண்ணாமலை: இதில், திருவண்ணாமலையில், மொத்தம் 3 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது... இதில், ஒரு நிலச்சரிவில் 7 பேர் பரிதாபமாக மண்ணில் புதைந்து இறந்துவிட்டார்கள்.. அந்த சடலங்களை மீட்கும் பணி இன்றும் தொடர்கிறது.. திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை வெள்ளத்தில் மூழ்கிவிட்டது. விழுப்புரம், கடலூர், டெல்டா மாவட்டங்களில் மழையால் பயிர்கள் நீரில் மூழ்கிவிட்டன. இதனால் விவசாயிகள் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
மழை வெள்ள சேதம் குறித்து ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின், பாதிப்புகள் கணக்கீடு செய்யப்பட்டு விரைவில் இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அத்துடன், புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்துக்கு மொத்தம் ரூ. 2000 கோடி நிவாரணம் வேண்டும் என்றும் கேட்டு, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.
ஸ்டாலின் ஆய்வு: இதனிடையே முதல்வர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் வெள்ளப் பாதிப்புக்கு உள்ளான பகுதிகளுக்கு சென்று மீட்பு நடவடிக்கைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். புயல் கரையை கடந்தபோது, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் பெரும் மழைப்பொழிவு இருந்தது.. அதிலும், விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மிகப்பெரிய அளவில் பாதிப்பை சந்தித்துள்ளன.
இப்படிப்பட்ட சூழலில், மழை பாதிப்பு மற்றும் மீட்பு பணிகள் குறித்து முதல்வர் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில், பல்வேறு துறை அதிகாரிகள், கண்காணிப்பு அலுவலர்கள், மீட்பு பணிகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட மூத்த அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.
-
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்?












Click it and Unblock the Notifications