'வள்ளல்' பெருமான்.. பெயரில் மட்டுமல்ல, உயிர் போன பின்பும் 9 பேரை உயிர் வாழ வைத்த வள்ளல் பேராசிரியர்
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயிலில் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர், உடல் உறுப்பு தானம் மூலம் இறந்த பின்னும் 9 பேருக்கு வாழ்வு அளித்துள்ளார்
கடலூர்: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயிலில் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர், உடல் உறுப்பு தானம் மூலம் இறந்த பின்னும் 9 பேருக்கு வாழ்வு அளித்துள்ளார். இந்த சம்பவம் கடலூர் மாவட்டத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் ஜெயராம் நகரைச் சேர்ந்தவர் வள்ளல் பெருமான் வயது 42.. இவர் திருக்குவளை அண்ணா பல்கலைகழகத்தில் உதவி பேராசியராக பணிபுரிந்து வந்தார், இவரது மனைவி சுமதி, சிதம்பரம் அரசு மருத்துவமனையில் மருத்துவராகவும் பணியாற்றி வருகிறார், இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.
இந்நிலையில், காட்டுமன்னார்கோயிலில் கடந்த பிப்ரவரி 15ம் தேதி கடை வீதி பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதியது. இதில் படுகாயம் அடைந்த வள்ளல் பெருமான் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்,.

வள்ளல் பெருமான்
ஆனால் வள்ளல் பெருமானின் உடல்நிலை மோசம் அடைந்தது. இதையடுத்து அவரை மேல்சிகிச்சைக்காக பாண்டிச்சேரி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிக்சை அளித்து வந்தனர். ஆனால் வள்ளல் பெருமான் சிசிக்சை பலன் இன்றி சனிக்கிழமை மூளைச்சாவு அடைந்தார்,

பலரும் பாராட்டி உள்ளனர்
இதை கேட்டு அதிர்ச்சி வள்ளல் பெருமானின் மனைவி சுமதி, அந்த சூழ்நிலையிலும் உடல் உறுப்புகளை தானாமாக வழங்க முன்வந்தார். அவர் இறந்தாலும் 10 பேருக்கு வாழ்வழிக்கனும் என்ற நிலைப்பாட்டில் இந்த முடிவு எடுத்தார். இதையடுத்து வள்ளல் பெருமானின் பெயருக்கு ஏற்றாற் போல், மூளைச்சாவு அடைந்தாலும் 9 பேருக்கு மறுவாழ்வு அளித்துள்ளார். உடல் உறுப்பு தானம் செய்த அவரது குடும்பத்தினரை பொதுமக்கள் பலரும் பாராட்டினார்கள். இந்த தகவல் பெரிய அளவில் பரவிய நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஜெயராம் நகரில் நடந்த இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர், வள்ளல் பெருமானின் உடல் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இறந்தாலும் 9 பேருக்கு வாழ்வு தந்த வள்ளல் பெருமானை பலரும் போற்றுகிறார்கள்.

2 பேருக்கு மறுவாழ்வு
முன்னதாக கடந்த வாரம் விருதுநகர் அருகே சாலை விபத்தில் காயமடைந்து மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகளால் இரண்டு பேர் மறுவாழ்வு பெற்றனர். மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த ஒருவரின் இதயம், கல்லீரல் கோவை மற்றும புதுக்கோட்டை மருத்துவமனைகளுக்கு ஆம்புலன்ஸ்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த உடல் உறுப்புகள் வெற்றிகரமாக பொருத்தப்பட்டு 2 நோயாளிகள் மறுவாழ்வு பெற்றனர்.

எப்படி விபத்து
விருதுநகரைச் சோ்ந்தவா் செல்வம் வயது 33. இவா், விருதுநகரில் கடந்த வாரம் நடந்த சாலை விபத்தில் பலத்த காயமடைந்தார். இதனால் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள வேலம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு செல்வம் மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து, செல்வத்தின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினா் சம்மதித்தனர். இதையடுத்து அவரது இதயம் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஒருவருக்கும், கல்லீரல் புதுக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஒருவருக்கும் தானமாக வழங்கப்பட்டது.

5 பேருக்கு வாழ்வு
இதேபோல் கடந்த பிப்ரவரி 8ம் தேதி திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் மூளைச்சாவு அடைந்தார். அவரால் ஐந்து பேர் மறுவாழ்வு பெற்றனர். திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியம், சின்னம்மாபேட்டை ஊராட்சி, ரயில்வே ஸ்டேஷன் சாலையை சேர்ந்தவர் ரோஸ் மகன் ஜேப்பி 42. இவர் அப்பகுதியில் பால் விற்பனை தொழில் செய்தார். இவர் சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்தார். ஜேப்பியின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் விரும்பினார்கள் இதையடுத்து கல்லீரல், சிறுநீரகங்கள், கண்கள், இதயம் தானமாக கொடுத்தனர். கல்லீரல், வேலுாரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், கண்கள், சிறுநீரகங்கள், இதயம் சென்னையில் உள்ள இரண்டு தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டு உரியவர்களுக்கு பொறுத்தப்பட்டது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications