நான் கருப்பு.. குழந்தை மட்டும் எப்படி சிவப்பு.. அமலாவை தலைகாணியை வைத்து அழுத்தி கொன்ற கணவர்

சந்தேகம் அதிகமானதால் மனைவியை கணவன் கொலை செய்துவிட்டார்

Subscribe to Oneindia Tamil

கடலூர்: "குழந்தை எப்படி சிவப்பாக பிறந்தது" என்று சந்தேகப்பட்டு அமலாவை கணவன் ராஜன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள கிராமம் மாளிகைமேடு. இங்கு வசித்து வந்த தம்பதி ராஜன் - அமலா. இவர்களுக்கு 5 மாதத்தில் ஆண் குழந்தை உள்ளது.

Husband killed wife due to family dispute near Cuddalore

ராஜன் அடிக்கடி வரதட்சணை கேட்டு அடிக்கடி அமலாவிடம் சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும் தான் கருப்பாக இருப்பதாலும், குழந்தை மட்டும் சிவப்பாக பிறந்ததால், அமலாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு, இதன் காரணமாகவும் தகராறு இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், பொழுது விடிந்ததில் இருந்தே குழந்தை அழுது கொண்டே இருந்தது. அமலாவோ, வெகுநேரமாகியும் தூக்கத்தை விட்டு எழவே இல்லை. சுரேஷையும் காணவில்லை. குழந்தையின் சத்தத்தினால் அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அமலாவை எழுப்பினர்.

ஆனால் அமலா அசைவற்று உயிரற்ற நிலையில் கிடந்தார். அதிர்ச்சி அடைந்த மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் சொல்ல, அவர்களும் விரைந்து வந்து அமலாவின் சடலத்தை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே காட்டுமன்னார்கோவில் ஸ்டேஷன் சென்ற சுரேஷ், மனைவியை கொலை செய்ததாக சொல்லி சரணடைந்துவிட்டார்.

"குழந்தை சிவப்பாக பிறந்ததால் அமலாவின் நடத்தையில் சந்தேகம் இருந்து கொண்டு இருந்ததால், அவரை தலைகாணியை முகத்தில் வைத்து அழுத்தி, கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தார். இதுகுறித்து போலீசார் அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தாய் இல்லாமல், பச்சை குழந்தை அழுததை பார்த்த அனைவருக்கும் இதயமே கலங்கிவிட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+