கண்ணால் பேசும் வித்தையெல்லாம் போக போக செய்வேன்.. கமல் ஹாசன் பேச்சு
கடலூர்: நான் நடிகன் என்பதால் மக்களிடம் கண்களாலேயே பேசி வாக்கு சேகரிப்பேன் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18ம் தேதி நடக்கிறது. தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் தீவிர பிரச்சாரத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன், இன்று கடலூர் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து இன்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அப்போது பேசிய கமல்ஹாசன், "நான் நடிகன் என்பதால் மக்களிடம் கண்களாலேயே பேசி வாக்கு சேகரிப்பேன். பல இடங்களில் நுழைய மற்றும் பேச தேர்தல் ஆணையம் எனக்கு தடை விதித்துள்ளது.
தபால் வாக்குப்பதிவின் போது போலீசார் தொப்பியை கழற்றிவிட்டு வாக்களிக்க வேண்டும். காவல்துறையை காவல்துறையாக செயல்பட வைப்பது தமிழக அரசின் கடமை" இவ்வாறு கூறினார்.












Click it and Unblock the Notifications