கும்பிடுவோம்.. கும்பிடுவோம்.. கொரோனா விழிப்புணர்வு பாடல்.. அசத்தும் காவலர்!
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் தலைமைக் காவலர் சிவபெருமான் என்பவர் கொரோனா வைரஸ் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பாடல் ஒன்றை எழுதி பாடியுள்ளார். அந்த பாடல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Recommended Video
கடலூர் மாவட்டம் பெரியகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவபெருமான். இவர் மருதூர் காவல்நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல், பெண் குழந்தைகள் விழிப்புணர்வு பாடல் என தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வு பாடல்களை பாடி சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

கடலூர் சிவபெருமான்
சிவபெருமான் பாடிய பல விழிப்புணர்வுப் பாடல்கள் பிரபலமானவை. வெறுமனே அதைச் செய்யாதீர்கள் இதைச் செய்யாதீர்கள் என்று கூறுவதை விட்டு விட்டு அருமையான பாடல்களை, எளிமையான வரிகளைப் போட்டு பாடியே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார் சிவபெருமான். இதனால் அவருக்கு போலீஸ் வட்டாரத்திலும் சரி பொதுமக்கள் மத்தியிலும் சரி நல்ல வரவேற்பு உள்ளது.

விழிப்புணர்வுப் பாடல்
இந்நிலையில் தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் குறித்து சிவபெருமான் பாடிய விரட்டிடுவோம், விரட்டிடுவோம் கொரோனாவை விரட்டிடுவோம் விழிப்புணர்வு பாடல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்தப் பாடலை அழகாக அவர் உணர்ந்து உள் வாங்கிப் பாடியுள்ளார்.

கும்பிடுவோம் கும்பிடுவோம்
கும்பிடுவோம் கும்பிடுவோம் என்று கை கூப்பி வணக்கம் செலுத்தும் நமது பாரம்பரியத்தை பின்பற்றுவோம் என்று அவர் அழகாக எடுத்துக் கூறியுள்ளார். இப்போது பல விதமான நோய்களும் பல்வேறு தொடுதல்கள் மூலம்தான் வருகின்றன என்பது நினைவிருக்கலாம். கொரோனா வைரஸும் அப்படியேதான் பரவி வருகிறது. எனவே கை கூப்பி கும்பிடும் பழக்கத்தை சிவபெருமான் ஊக்குவிக்கிறார்

கவனமாக இருப்போம்
இதுகுறித்து தலைமை காவலர் சிவபெருமான் கூறுகையில், இந்த வைரஸ் குறித்து நாள்தோறும் செய்திதாள்களில் பார்க்கிறோம். தமிழகத்தில் இந்த வைரஸால் பாதிப்பு இல்லையென்றாலும், முன்னெச்சரிக்கையாக நாம் விழிப்புணர்வோடு, தூய்மையாக இருந்தால் அதன் பரவலைத் தடுக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். அவர்கள் கூறிய தகவலை வைத்து இந்த விழிப்புணர்வு பாடலை எழுதி, பாடியுள்ளேன். இதன் மூலம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுவது எனக்கு மன நிறைவைத் தருகிறது என்றார் சிவபெருமான்.
-
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications