ஒரு மாதம் கழித்து வாக்கு எண்ணிக்கை.. என்ன நடக்குமோ.. சந்தேகம் கிளப்பும் கே. பாலகிருஷ்ணன்!
சிதம்பரம்: ஒரு மாதம் வாக்குப் பெட்டியை பாதுகாப்பது என்ன நடக்குமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. காலை முதல் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள், சினிமா பிரபலங்கள் என வாக்களித்து வருகிறார்கள். அந்த வகையில் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தனது வாக்கை கே பாலகிருஷ்ணன் பதிவு செய்தார்.

திமுக தலைமை
அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மக்கள் எழுச்சியோடு வாக்களித்து வருகிறார்கள். இதை பார்க்கும் போது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதியாகிறது. தமிழகத்தில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றி பெறும்.

அதிமுக- பாஜக கூட்டணி
மக்களுடைய இந்த எழுச்சியை தாங்க முடியாத ஆளும் அதிமுக- பாஜக கூட்டணியினர் சரளமாக பணப்பட்டுவாடா செய்துள்ளனர். அந்த பண பலத்தை முறியடித்து திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும். தேர்தல் ஆணையம் வாக்குப் பதிவுக்கு முன் முடிவுகளை அறிய ஒரு மாதம் காத்திருக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.

என்ன நடக்கும்
இறுதிக் கட்டமாக நடத்தியிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது. ஒரு மாத காலம் இந்த வாக்குப் பெட்டிகளை பாதுகாப்பது என்பது அதில் என்ன நடக்குமோ ஏது நடக்குமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. வரும் தேர்தல்களிலாவது இந்த நிலை மாற வேண்டும்.

தமிழக தேர்தல்
மேற்கு வங்க தேர்தலின் இறுதிக் கட்ட நாளில் தமிழக தேர்தல் நடத்தியிருந்தால் சந்தேகம் வந்திருக்காது என்றார். தமிழகம், மேற்கு வங்கம், புதுச்சேரி, கேரளா, அஸ்ஸாம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபைத் தேர்தல் பல கட்டமாகவும் ஒரே கட்டமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இவற்றுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி நடைபெறுகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications