கள்ளக்குறிச்சி கலவரம்.. ஹைகோர்ட் கேட்ட கேள்வி! மக்கள் அதிகாரம், தந்தை பெரியார் திக நிர்வாகிகள் கைது!

Subscribe to Oneindia Tamil

கடலூர்: கள்ளக்குறிச்சி போராட்டத்தை தொடர்ந்து மக்கள் அதிகாரம், தந்தை பெரியார் திராவிட கழக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சியில் கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவி பலியான விவகாரம் கடுமையான சட்ட ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தி உள்ளது. அங்கு ஹாஸ்டலில் தங்கி படித்த 12ம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் கடந்த 12ம் தேதி பலியானார்.

ஹாஸ்டலில் மாடியில் இருந்து கீழே விழுந்து அந்த மாணவி மரணம் அடைந்தார். ஆனால் இது கொலையா, தற்கொலையா என்ற குழப்பம் நிலவி வருகிறது. இதற்கு எதிராக நேற்று முதல்நாள் கள்ளக்குறிச்சியில் பெரும் கலவரம் நடைபெற்றது.

விசாரணை

விசாரணை

இதையடுத்து வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. தற்போது வழக்கில் தீவிரமான விசாரணை நடைபெற்றது. மாணவியின் பிரேத பரிசோதனை இன்று மீண்டும் நடத்தப்பட உள்ளது. அதோடு தாளாளர் ரவிக்குமார் , முதல்வர் சிவசங்கரன், செயலாளர் சாந்தி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கிருத்திகா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

எத்தனை பேர் கைது

எத்தனை பேர் கைது

இந்த போராட்டம் தொடர்பாக நேற்று மாலை வரை மொத்தமாக 330 பேர் கைது செய்யப்பட்டனர். நேற்று முதல்நாள் மாலை 70 பேர் கைது செய்யப்பட்டனர். நேற்று 260 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில்தான் நேற்று உயர் நீதிமன்ற விசாரணையில், போராட்டம் செய்தவர்களை கண்டுபிடியுங்கள். தனிப்படை அமையுங்கள். போராட்டக்காரர்களை கைது செய்தால் மட்டும் போதாது.

தனிப்படை

தனிப்படை

அவர்கள் கையில் சட்டங்களை எடுக்க கூடாது. போலீஸ் யார் கட்டுப்பாட்டிலும் இருக்க கூடாது. நீங்கள் சட்டத்தை நிலைநாட்ட வேண்டும். நான் டிவியில் அனைத்தையும் பார்த்தேன். கலவரத்தில் கருப்பு சட்டை அணிந்து இருந்தவர்கள் யார்? இந்த கலவரம் கோபம் காரணமாக நடந்தது போல தெரியவில்லை. திட்டமிட்டு செய்தது போல இருக்கிறது. இந்த கலவரம் திட்டமிட்டு செய்யப்பட்ட குற்றம். இதை போலீசார் சாதாரணமாக விட்டுவிட கூடாது.

Recommended Video

    கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: மெரினாவில் போராட்டம்? போலீஸ் குவிப்பால் பரபரப்பு
     கருப்பு சட்டை

    கருப்பு சட்டை

    இதில் எடுக்கப்படும் ஆக்சன் எதிர்காலத்தில் மற்றவர்களுக்கு பாடமாக இருக்க வேண்டும், என்று குறிப்பிட்டனர். இந்த நிலையில்தான் கள்ளக்குறிச்சி போராட்டத்தை தொடர்ந்து கள்ளக்குறிச்சி மக்கள் அதிகாரம் அமைப்பின் செயலாளர் ராமலிங்கம் கைது செய்யப்பட்டுள்ளார். அதேபோல் கள்ளக்குறிச்சி தந்தை பெரியார் திராவிட கழக செயலாளர் பிரபு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளார். 10 க்கு மேற்பட்ட பிரிவுகளில் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+