Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கனகசபை ஏற அனுமதி மறுப்பு.. சிதம்பரம் தீட்சிதர்கள் வைத்த பலகை அகற்றம்.. அறநிலையத்துறை அதிரடி

Subscribe to Oneindia Tamil

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனக சபையில் ஜூன் 24, 25, 26 மற்றும் 27 ஆகிய நாள்களில் வழிபடத் தடை விதித்து தீட்சிதர்கள் வைத்திருந்த அறிவிப்பு பலகையை அறநிலையத்துறை அதிகாரிகள் அகற்றியுள்ளனர். காவல்துறையினர் உதவியுடன் தீட்சிதர்கள் வைத்த அறிவிப்பு பலகை அகற்றப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் அமைந்திருக்கும் நடராஜர் கோயில் தீட்சிதர்களுக்கும் அறநிலையத்துறை அதிகாரிகளுக்கும் இடையே கடந்த ஓராண்டு காலமாகவே மோதல் நீடித்து வருகிறது. நகைகள்,கோவில் கணக்கு வழக்குகளை ஆராய வந்த அறநிலையத்துறை அதிகாரிகளை அனுமதிக்காமல் தீட்சிதர்கள் தடுத்தனர். பல கட்ட போராட்டத்திற்குப் பிறகு அறநிலையத்துறையினர் கோவில் நகைகள், கணக்கு வழக்குகளை ஆய்வு செய்தனர்.

Kanakasabha issue HRCE removed to Notice boards put up by Deekshithar in Chidambaram Natarajar Temple

இதனிடையே நடராஜர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் திருச்சிற்றம்பல மேடை என்று கூறப்படும் கனகசபை மீது ஏறி நின்று சாமியை தரிசனம் செய்வது வழக்கம். கொரோனா காலத்தில் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைக்காக திருச்சிற்றம்பல மேடை தரிசனத்தை நிறுத்தி வைத்திருந்த தீட்சிதர்கள், கொரோனா கட்டுப்பாடுகளை அரசு தளர்த்திய பிறகும் யாரையும் அனுமதிக்கவில்லை.

ஒருசில தீட்சிதர்கள் திருச்சிற்றம்பல மேடை மீது பக்தர்கள் ஏறி தரிசனம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதனால் தீட்சிதர்களுக்குள்ளேயே மோதல் ஏற்பட்டு அந்த வீடியோ காட்சிகள் வெளியானது. அதையடுத்து திருச்சிற்றம்பல மேடை மீது ஏறி நின்று தரிசனம் செய்ய முயன்ற ஜெயசீலா என்ற பெண் பக்தயை சாதி பெயரைச் சொல்லித் திட்டியதாக, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 20 தீட்சிதர்கள் மீது வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

சிதம்பரம் திருச்சிற்றம்பல மேடையில் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்று ஜெமினி ராதா என்பவர் நீதிமன்றத்தை அணுகியதன் அடிப்படையில், திருச்சிற்றம்பல மேடையில் ஏறி தரிசனம் செய்யப் பொதுமக்களை அனுமதிக்க வேண்டும் என்று கடந்த மே மாதம் அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு. ஆனால் அரசாணை வெளியிட்ட பிறகும் தங்களைத் திருச்சிற்றம்பல மேடையில் நின்று தரிசனம் செய்வதற்கு தீட்சிதர்கள் அனுமதிக்கவில்லை என்று இந்து சமய அறநிலையத்துறைக்குப் புகார் அளித்தனர் பக்தர்கள்.

இந்த நிலையில் ஆனி திருமஞ்சன விழா கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து பக்தர்கள் கூட்டம் சிதம்பரத்தில் அதிகரித்து வருகிறது. நடராஜர் சந்நதியில் உள்ள கனக சபையில், பொது எனும் மேடையில் மக்கள் ஜூன் 24, 25, 26 மற்றும் 27 ஆகிய நாள்களில் வழிபடத் தடை விதித்து பலகை ஒன்றை வைத்தனர்.

அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ள செய்தி அறிந்து அறநிலையத்துறை அதிகாரிகள் சிதம்பரம் தாசில்தாருடன் சென்று அறிவிப்பு பதாகையை அகற்றக் கோயிலுக்குச் சென்றனர். அப்போது அங்கிருந்த தீட்சிதர்கள் அறநிலையத்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கனகசபை மீறி ஏறி சாமி தரிசனம் செய்ய அரசாணை இருக்கிறது. அதற்கு மாறாகப் பதாகை வைத்துள்ளதை ஏற்க முடியாது என அறநிலையத்துறை அதிகாரிகள் எடுத்துக் கூறினாலும் பதாகையை அகற்ற தீட்சிதர்கள் அனுமதிக்கவில்லை.

இந்த நிலையில் தீட்சிதர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு கூறியிருந்தார். இதனையடுத்து இன்று மாலை காவல்துறை அதிகாரிகளுடன் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சென்ற அறநிலையத்துறை அதிகாரிகள் தீட்சிதர்கள் வைத்திருந்த அறிவிப்பு பலகைகளை அகற்றினர். இதனையடுத்து சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+