கனகசபை ஏற விடமாட்டோம்.. தடுக்கும் தீட்சிதர்கள்.. சிதம்பரம் கோவிலில் பதற்றம்.. போலீஸ் குவிப்பு
கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பக்தர்கள் கனகசபை ஏறி வழிபட தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் அங்கு கூச்சல் குழப்பமும் பதற்றமும் உருவானது. சார் ஆட்சியர் தலைமையில் பக்தர்கள் கனகசபையில் ஏறி வழிபட இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா தேரோட்டத்தை முன்னிட்டு 24 முதல் 27 வரை 4 தினங்களுக்கு பக்தர்கள் யாரும் கோயிலின் கனகசபை மேல் ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என தீட்சிதர்கள் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. இதற்கு சில பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு புகார் அளித்தனர்.
இதனை தொடர்ந்து அறிவிப்பு பலகையை அகற்றச்சென்ற இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்களுக்கும், தீட்சிதர்களுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில், நேற்று சிதம்பரம் கோயில் கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை என தீட்சிதர்கள் வைத்த பலகையை அதிகாரிகள் அகற்றினர்.

கோட்டாட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய் அதிகாரிகள், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்து தீட்சிதர்கள் வைத்திருந்த அறிவிப்பு பலகையை அகற்றினர். இதற்கு தீட்சிதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, அரசு ஊழியரை பணிசெய்ய விடாமல் தடுத்ததாக சிதம்பரம் தீட்சிதர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களின் செயலாளர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், தீட்சிதர்கள் வைத்த பதாகை முன்னறிவிப்பின்றி அகற்றப்பட்டுள்ளது என்றும், பதாகையை அகற்றிய இந்து சமய அறநிலையத்துறை ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.
தங்கள் தரப்பு விளக்கத்தை கேட்காமல், பதாகையை அதிகாரிகள் அகற்றியதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்த புகாரை பெற்றுக்கொண்ட போலீசார், உரிய விசாரணை நடத்தி, அதன் பிறகு வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். இதனிடையே பக்தர்கள் கனகசபை மீதேறி வழிபட அனுமதிப்பது தொடர்பாக சிதம்பரம் சார் ஆட்சியர் மற்றும் தீட்சிதர்கள் இடையே கோவில் வளாகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
சார் ஆட்சியர் தலைமையில் பக்தர்களை கனகசபையில் ஏறி வழிபட வைக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முயற்சி செய்து வருகின்றனர். கனகசபை ஏறி வழிபடுவதற்கு தீட்சிதர்கள் மறுப்பு தெரிவிக்கவே நடராஜர் கோவிலில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. கனகசபை மீதேறி நடராஜரை வழிபட ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்துள்ளதால் பதற்றம் நிலவுகிறது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications