தொகுதி விட்டு தொகுதி பாய்ந்து.. அசால்ட்டாக கடலூரில் வென்ற விஷ்ணு பிரசாத் யார் இவர்?
கடலூர்: கடலூர் லோக்சபா தொகுதியில் 1,85,896 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் பாரம்பரிய அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர்.
காங்கிரஸ் பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்தவர் டாக்டர் விஷ்ணு பிரசாத். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்த கிருஷ்ணசாமியின் மகன். பாமக தலைவர் அன்புமணியின் மனைவி சவுமியாவின் சகோதரர்.

2006-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் செய்யாறு தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் விஷ்ணு பிரசாத். கடந்த லோக்சபா தேர்தலில் ஆரணி லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
தற்போது 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் கடலூர் தொகுதியில் களமிறங்கி வாகை சூடியிருக்கிறார் விஷ்ணு பிரசாத். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு இவர் பெயரும் அடிபட்ட வரலாறு உண்டு,
2006-ம் ஆண்டு செய்யாறு சட்டசபை தொகுதியில் போட்டியிட்ட விஷ்ணு பிரசாத், 60109 வாக்குகளைப் பெற்று வென்றார். அதிமுகவின் பாவையை தோற்கடித்து வென்றார் விஷ்ணு பிரசாத்.
2019-ம் ஆண்டு ஆரணி லோக்சபா தொகுதியில் 6,17,760 வாக்குகள் பெற்று பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றார் விஷ்ணு பிரசாத். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக ஏழுமலை 3,86,954 வாக்குகள்தான் பெற்றிருந்தார்.
தற்போதைய 2024 தேர்தல் கடலூர் தொகுதி முடிவுகள் விவரம்:
விஷ்ணுபிரசாத் (காங்கிரஸ்) 455053
சிவக்கொழுந்து (அதிமுக) 269157
தங்கர்பச்சான் (பாமக) 205244


Click it and Unblock the Notifications
