கொடுமை.. பறந்து வந்து கயிறு.. கழுத்தில் சிக்கி... தரதரவென இழுத்து சென்று.. சிதம்பரம் அருகே பரிதாபம்!
லாரியில் இருந்த கயிறு சிக்கி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்
சிதம்பரம்: லாரியில் இருந்து ஒரு கயிறு பறந்து வந்து, ரோட்டில் நடந்து கொண்டிருந்தவர் கழுத்தில் சிக்கி கொண்டுவிட்டது.. பிறகு அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு அந்த லாரி அந்நபரை அப்படியே தரதரவென ரோட்டில் இழுத்து சென்றதில், அந்த நபர் முகம் சிதைந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
சிதம்பரத்தில் இருந்து காட்டுமன்னார்கோவில் செல்லும் சாலையில் சரக்கு லாரி ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது.
புது பூலமேடு அருகே அந்த லாரி சென்றபோது, லாரியின் மேற்புறத்தில் அதாவது டாப்பில் இருந்த கயிற்றின் முனையை பிடித்தபடி, ஒருவர் சாலையில் இழுத்து கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

டிரைவர்
இதை லாரிக்கு பின்னாடி பைக்கில் வந்த ஒருவர் பார்த்துள்ளார்.. உடனே லாரியை நெருங்கி அந்த டிரைவரிடம் இதை பற்றி சொல்லவும், அந்த டிரைவரோ லாரியை நிறுத்திவிட்டு, அப்படியே எகிறி குதித்து ஓடிவிட்டார்.. பிறகு, கயிற்றால் இழுத்து வரப்பட்டவரை மீட்க சென்றால், அவர் ஏற்கனவே பரிதாபமாக உயிரிழந்து கிடந்தார்.. அவர் முகம் சிதைந்து போய் கிடந்தது.

கயிறு
சரக்கு லாரி வழக்கமாகவே படுவேகமாக செல்லும் என்பதால், இந்த லாரியின் பின்னால் கயிற்றில் சிக்க கொண்டவரும் ரோட்டில் அதே வேகத்திற்கு இழுத்து வரப்பட்டுள்ளார்.. பிறகு போலீசார் விரைந்து வந்து இது சம்பந்தமாக விசாரணை நடத்தியதில், உயிரிழந்தவர் பெயர் அன்புசெல்வன் என்பதும், அவர் அதே பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

அலட்சியம்
அதாவது, அது சரக்கு லாரி என்பதால், சரக்குகளை கட்டுவதற்காக பெரிய பெரிய தடித்த கயிறுகளை சுருட்டி வைத்திருப்பது வழக்கம்.. ஆனால், அந்த கயிறுகளை சரியாக சுருட்டி வைக்காமல் வேண்டுமென்றே அலட்சியமாக லாரியின் கூரைமீது போட்டிருக்கலாம் என்றும், லாரி சென்ற வேகத்தில் அந்த கயிறு காற்றில் பறந்து ரோட்டில் சென்று கொண்டிருந்த அன்புசெல்வனின் உடலை இறுக்கி இழுத்து கொண்டு வந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

விசாரணை
ஆனால், அந்த லாரி டிரைவர் கிடைத்தால்தான் உண்மை தெரியவரும் என்பதால், அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.. லாரி டிரைவர் பெயர் பிரபு.. வல்லம்படுகைகையை சேர்ந்தவராம்.. லோடு இறக்கிவிட்டு வரும்போதுதான் இந்த சம்பவம் நடந்துள்ளது என்பது தெரியவந்துள்ளது.. இது சம்பந்தமான வீடியோவும் வெளியாகி பெரும் அதிர்ச்சியை தந்து வருகிறது.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications