மணிமேகலை விருது.. குறிஞ்சிப்பாடி மகளிர் திட்ட வட்டார இயக்க மேலாளருக்கு வேளாண் அமைச்சர் பாராட்டு
கடலூர்: வட்டார அளவிலான கூட்டமைப்பிற்கான மாநில அளவில் சிறந்த விருதை கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பெற்றது. இதற்கான விருதை முதல்வரிடம் இருந்து குறிஞ்சிப்பாடி மகளிர் திட்ட வட்டார இயக்க மேலாளர் சத்தியநாதன் பெற்றுக்கொண்டார். மணிமேகலை விருது பெற்ற சத்தியநாதனை நேரில் அழைத்து தமிழக வேளாண் மற்றும் உழவர் நலன் துறை அமைச்சர் எம்.ஆர்.ஏ பன்னீர் செல்வம் பாராட்டினார்.
சிறப்பாக செயல்படக் கூடிய சமுதாயம் சார்ந்த நிறுவனங்களான ஊரகப் பகுதியின் சுய உதவிக் குழுக்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்கம், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்புகள் மற்றும் நகர்ப்புர பகுதியின் சுய உதவி குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்பு, நகர அளவிலான கூட்டமைப்பு ஆகியவற்றின் செயல்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில் 2006-2007ஆம் ஆண்டு மணிமேகலை விருதுகள் வழங்கும் நடைமுறையை அப்போதைய முதல்வர் கருணாநிதி அறிவித்தார். இவ்விருதுகள் சுய உதவிக் குழுக்கள் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளை மென்மேலும் சிறப்பாக செயல்பட ஊக்குவிக்கும் வகையில் தோற்றுவிக்கப்பட்டன.

அதன்பிறகு பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்த இந்த விருதுகளை கடந்த மாதம் 29 ஆம் தேதி நடைபெற்ற அரசு விழாவில், (2021-22ஆம் ஆண்டிற்கான மணிமேகலை விருதுகளை) தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வழங்கினார். இதில், வட்டார அளவிலான கூட்டமைப்பிற்கான விருதை கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பெற்றது. இதற்கான விருதை முதல்வர் மு.க ஸ்டாலினிடம் இருந்து குறிஞ்சிப்பாடி மகளிர் திட்ட வட்டார இயக்க மேலாளர் சத்தியநாதன் பெற்றார்.
தனது தலைமையிலான கூட்டமைப்பிற்கு மாநில அளவில் முதல் பரிசான மணிமேகலை விருது வழங்கப்பட்டதால் குறிஞ்சிப்பாடி மகளிர் திட்ட வட்டார இயக்க மேலாளர் சத்தியநாதன் பெரும் மகிழ்ச்சி அடைந்தார். மணிமேகலை விருது பெற்ற சத்தியநாதனை நேரில் அழைத்து தமிழக வேளாண் மற்றும் உழவர் நலன் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் பாராட்டினார்.

இதற்காக அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வத்திற்கு தனது நன்றியை தெரிவித்துக்கொள்வதாக குறிஞ்சிப்பாடி மகளிர் திட்ட வட்டார இயக்க மேலாளர் சத்தியநாதன் தெரிவித்துள்ளார். மேலும் கடலூர் மாவட்ட மகளிர் திட்டத்திற்கும் தனது நன்றியை தெரிவித்துக்கொள்வதாகவும் சத்தியநாதன் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications