பூணூல் அணிந்த 100 தலித்கள்.. ஆளுநர் ஆர்என் ரவி பங்கேற்பு! நந்தனார் குருபூஜை விழாவில் என்ன நடந்தது?
கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் காட்டுமன்னார் கோவில் அருகே இன்று நந்தனார் குருபூஜை விழா நடந்தது. இந்த விழாவில் ஆளுநர் ஆர்என் ரவி பங்கேற்ற நிலையில் 100 தலித்கள் பூணூல் அணிந்து கொண்டனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் காட்டுமன்னார் கோவில் அருகே ஆதனூர் கிராமம் உள்ளது. இங்கு தான் நந்தனார் பிறந்தார். இந்த நிலையில் ஆதனூரில் நந்தனார் குருபூஜை விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இந்த விழாவுக்கு தமிழக ஆளுநர் ஆர்என் ரவிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து இன்று நடந்த விழாவில் ஆளுநர் ஆர்என் ரவி பங்கேற்றார்.
இந்த விழாவில் 100 ஆதிதிராவிடர்களுக்கு பூணூல் அணிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து ஆளுநர் ஆர்என் ரவி முன்னிலையில் 100 ஆதிதிராவிடர்கள் பூணூல் அணிந்து கொண்டனர். மேளதாளங்கள், மந்திரங்கள் முழங்க ஆதிதிராவிடர்கள் பூணூல் அணிந்து கொண்டனர்.
இந்த விழாவில் ஆளுநர் ஆர்என் ரவியுடன் ஸோகோ நிறுவனத்தின் சிஇஓ ஸ்ரீதர் வேம்பு உள்பட பலர் பங்கேற்றனர். முன்னதாக இந்த விழாவில் ஆளுநர் ஆர்என் ரவி பங்கேற்க வருவதால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. அதாவது விழாவுக்காக ஆளுநர் ஆர்என் ரவி நேற்று இரவு கடலூர் சென்று விருந்தினர் மாளிகையில் தங்கினார்.

இன்று காலையில் அவர் நிகழ்ச்சிக்கு புறப்பட்டார். அப்போது ஆளுநர் ஆர்என் ரவி சனாதனத்தை தூக்கி பிடிக்கிறார். அவர் திரும்பி போக வேண்டும். நந்தனார் குருபூஜையில் ஒரு பிரிவினைவாதத்தை கொண்டு வருவதற்காக பூணூல் அணியும் விழாவில் கலந்து கொள்ள வந்திருக்கிறார். அவருக்கு கருப்பு கொடி காட்ட இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தொண்டர்கள் முயன்றனர்.
இதையடுத்து அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர். முன்னதாக ஆளுநர் ஆர்என் ரவி வருகையையொட்டி கடலூர் மாவட்ட எஸ்பி ராஜாராம் தலைமையில் 700க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த குருபூஜை விழாவை முடித்த ஆளுநர் ஆர்என் ருவி அதன் பிறகு அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கும் சென்று பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications