சிதம்பரம் கோவிலுக்கு ஒரு பிரச்சனை என்றால் முதல் ஆளாக வருவேன்! தீவிரவாத எதிர்ப்பு இயக்க தலைவர் உறுதி!
கடலூர்: சிதம்பரம் கோவிலுக்கு ஒரு பிரச்சனை என்றால் முதல் ஆளாக வருவேன் என தேசிய தீவிரவாத எதிர்ப்பு இயக்க தலைவர் எம்.எஸ்.பிட்டா உறுதியளித்துள்ளார்.
Recommended Video
சிதம்பரம் கோவிலில் சாமி தரிசனம் செய்த வந்த அவர் செய்தியாளர்களிடம் இதனைக் கூறினார்.
தமிழகத்தில் தனக்கு இந்து சமய அறநிலைத்துறை சிறப்பான ஏற்பாடுகளை செய்து கொடுத்ததாக நன்றி தெரிவித்தார்.

சாமி தரிசனம்
தேசிய தீவிரவாத எதிர்ப்பு இயக்கத்தின் தலைவர் எம்.எஸ். பிட்டா சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வந்தார். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோயிலுக்குள் சென்று அவர் சாமி தரிசனம் செய்தார். அப்போது கோயில் தீட்சிதர்கள் அவருக்கு வரவேற்பு அளித்து சாமி தரிசனம் செய்தார். பின்னர் வெளியே வந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எம்.எஸ்.பிட்டா, கோயில் நிர்வாகத்திற்கு பாதுகாப்பு அளிப்பது தான் அரசின் பணி என்றார்.

முதல் ஆளாக
கோயிலுக்கோ அல்லது கோயில் நிர்வாகத்திற்கோ ஏதாவது பிரச்சினை என்றால் நான் முதலில் வந்து நிற்பேன். எனக்கு சிறப்பான பாதுகாப்பு அளித்த தமிழ்நாடு காவல்துறை டிஜிபி மற்றும் காவல் துறைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் பல்வேறு கோயில்களை சுற்றிப் பார்த்து சாமி தரிசனம் செய்தேன். எல்லாக் கோயில்களிலும் இந்து சமய அறநிலைத்துறை சிறப்பான ஏற்பாடுகளை செய்து கொடுத்தார்கள் என கூறினார்.

அடிக்கடி சர்ச்சை
இதனிடையே சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களை பொறுத்தவரை அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருவது குறிப்பிடத்தக்கது. அண்மையில் கூட வயது முதிர்ந்த தீட்சிதர் ஒருவரை பிரசாதம் கேட்ட காரணத்திற்காக கோவில் அலுவலகத்தில் இருந்த தீட்சிதர்கள் தாக்கிய நிகழ்வு அரங்கேறியது. அதேபோல் சில மாதங்களுக்கு முன்பு தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்த பெண் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிகழ்வும் சிதம்பரம் கோவில் வளாகத்தில் நடந்தது.

கம்யூனிஸ்ட்கள் குரல்கள்
சிதம்பரம் நடராஜர் கோவிலை தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சியினர் குரல் கொடுத்து வரும் சூழலில், சிதம்பரம் கோவிலுக்கு ஒரு பிரச்சனை என்றால் முதல் ஆளாக வருவேன் என தீவிரவாத எதிர்ப்பு இயக்க தலைவர் எம்.எஸ்.பிட்டா தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications