செல்வியை கரண்ட் கம்பத்தில் கட்டி வைத்து அடித்த ஊர் "பெரிய மனுஷன்".. கலங்க வைக்கும் வீடியோ
பெண்ணை கம்பத்தில் கட்டி வைத்து உதைத்துள்ளனர்
Recommended Video
கடலூர்: "உன் பையன் என் பொண்ணை எங்கே கூட்டிட்டு போய் வெச்சிருக்கான்" என்று கேட்டு பெண்ணின் அம்மா செல்வியை ஊர் பெரிய மனுஷன் ஒருவர் கம்பத்தில் கட்டி வைத்து உதைத்துள்ளார். செல்வி அடி வாங்கும் போட்டோக்கள் இணையத்தில் கலங்கடித்து வருகின்றன.
விருத்தாசலம் அருகே உள்ள விளாங்காட்டூர் கிராமத்தை சேர்ந்த தம்பதி பொன்னுசாமி- செல்வி. இவர்களுக்கு 25 வயதில் பெரியசாமி என்ற மகன் உள்ளார்.
பெரியசாமிக்கும் அதே ஊரை சேர்ந்த கொளஞ்சி என்பவரின் மகள் பவளிக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. பவளி, பவளி, திருச்சி தனியார் ஆஸ்பத்திரியில் நர்ஸாக வேலைபார்த்து வந்தார்.

பிரச்சனை
இவர்களின் காதல் விஷயம் வீட்டுக்கு தெரிந்ததும், பவளிக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்துவிட்டார்கள். இந்த விஷயத்தை பவளி காதலனிடம் சொல்ல.. காதலர்கள் இருவரும் சில நாள்கள் முன்பு வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டனர்.

தகராறு
இதனால் இரு குடும்பத்தினர் இடையே பிரச்னை இருந்து வந்தது. நேற்று சாயங்காலம், பெரியசாமியின் தாய் செல்வி வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பவளியின் தந்தை கொளஞ்சியிடம் தகராறில் ஈடுபட்டார்.

கட்டி வைத்தார்
"ஏன் உன் மகன் என் மகளை இன்னும் வீட்டிற்கு அழைத்து வந்து விடவில்லை, உன் மகன் என் மகளை எங்கே வெச்சிருக்கான்?" என்று கேட்டு செல்வியை கடுமையாக சகட்டுமேனிக்கு திட்டி உள்ளார். பிறகு அங்கிருந்த மின்கம்பத்தில் கட்டி வைத்தும் தாக்கியுள்ளார்.

சிகிச்சை
இதை கிராம மக்கள் நேரிடையாக பார்த்தும் தடுக்க முடியாமல் திணறினர். பின்னர் உடனடியாக போலீசுக்கு தகவல் சொன்னார்கள். விரைந்து வந்த போலீசார் செல்வியை மீட்டு விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தொடர்ந்து செல்வி கொடுத்த புகாரின் பேரில் கொளஞ்சியை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications