கடலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஓபிஎஸ்-க்கு “அது” போச்சு.. அவருக்கு பாஜகவும் தேவை, திமுகவும் தேவை - அதிமுக எம்எல்ஏக்கள் ஓபன் டாக்

Google Oneindia Tamil News

கடலூர்: ஓ.பன்னீர்செல்வம் அதிமுக தொண்டர்களின் நம்பிக்கை இழந்து விட்டார் என சிதம்பரத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டாக தெரிவித்துள்ளனர்.

Recommended Video

    தொண்டர்களின் நம்பிக்கையை ஓபிஎஸ் இழந்து விட்டார்.. அதிமுக எம்எல்ஏக்கள் பரபரப்பு பேட்டி

    சிதம்பரம் எம்எல்ஏ அலுவலகத்தில் சிதம்பரம் எம்.எல்.ஏ வும் மாவட்ட செயலாளருமான பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார்.

    அவருடன் புவனகிரி எம்எல்ஏவும் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளருமான அருள்மொழித்தவனும் கூட்டாக பேட்டியளித்தார்.

    ஹோண்டா சிட்டி காரில் தனியாக சென்ற ஓ.பன்னீர்செல்வம்! யாருடன் ரகசிய சந்திப்பு? பரபரப்பான அரைமணி நேரம்!ஹோண்டா சிட்டி காரில் தனியாக சென்ற ஓ.பன்னீர்செல்வம்! யாருடன் ரகசிய சந்திப்பு? பரபரப்பான அரைமணி நேரம்!

    தொண்டர்கள் நம்பிக்கை இழந்த ஓபிஎஸ்

    தொண்டர்கள் நம்பிக்கை இழந்த ஓபிஎஸ்

    அப்போது பேசிய பாண்டியன், "அதிமுக ஒன்றரை கோடி தொண்டர்களின் நம்பிக்கையை இழக்கும் விதமாக சட்டமன்றத்தில் கலைஞரைப் பற்றி புகழாரம் பேசியது, ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் அதிமுக எம்.பி யாக இருந்து கொண்டு ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தது, தொடர்ந்து வெறுக்கத்தக்க செயல்களில் ஈடுபட்டு வருவதால் தொண்டர்களிடையே செல்வாக்கை இழந்துள்ளார்.

     எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர்

    எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர்

    அதேவேளையில் கடந்த நான்கரை ஆண்டுகள் பொற்கால ஆட்சியை தந்து மக்கள் நலத்திட்டங்கள் வழங்கி என மக்களின் முதல்வராகவும் கட்சியை சிறப்பாக வழிநடத்திய எடப்பாடி பழனிசாமி வருகிற ஜூலை 11ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் பொதுச் செயலாளராக நியமிக்கப்படுவது உறுதி. இதற்கு எதிராக ஓபிஎஸ் என்ன சதி திட்டம் தீட்டினாலும் அதனை முறியடித்து எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளர் ஆக்குவோம்.

     எடப்பாடிக்கு ஆதரவு

    எடப்பாடிக்கு ஆதரவு

    தமிழகத்தில் உள்ள 66 அதிமுக எம்.எல்.ஏக்களில் 63 எம்.எல்.ஏக்களும் 75 மாவட்ட செயலாளர்களின் 70 பேரும் 2665 பொதுக்குழு உறுப்பினர்களில் 2441 பேரும் இபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். வரும் பொதுக்குழுவில் அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமனம் செய்யப்படுவது உறுதி." என்றார்.

    பாஜகவும் தேவை, திமுகவும் தேவை

    பாஜகவும் தேவை, திமுகவும் தேவை


    அதன் பின்னர் பேசிய எம்.எல்.ஏ, அருண்மொழித்தேவன், "உள்ளாட்சி இடைத்தேர்தலில் ஓபிஎஸ் காலக்கெடு முடிந்து பொய்யான தகவலை தொண்டர்களுக்கு கடிதமாக அனுப்பியது தொண்டர்களை ஏமாற்றும் செயல். ஓபிஎஸ்-க்கு பாஜகவும் தேவை, சசிகலாவும் தேவை, ஆளும் திமுக கட்சியும் தேவை, அண்ணா திமுகவில் அதிகாரம் தேவை என்ற நிலைப்பாட்டை வைத்துள்ளார். ஓபிஎஸ் செல்வாக்கு இல்லாத தலைவனாக தொண்டர்கள் மத்தியில் காணப்படுவதால் வருகின்ற பொதுக்குழுவில் இபிஎஸ் ஏகோபித்த ஆதரவுடன் பொதுச்சயலாளராக தேர்வு செய்யப்படுவது உறுதி." என்றார்.

    English summary
    O.Panneerselvam lost AIADMK workers support - AIADMK MLA Pandiyan and Arunmozhithevan open talk: : ஓ.பன்னீர்செல்வம் அதிமுக தொண்டர்களின் நம்பிக்கை இழந்து விட்டார் என சிதம்பரத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டாக தெரிவித்துள்ளனர்.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X