கடலூரில் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து.. சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்
கடலூர்: கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே ஆம்னி பேருந்து திடீரென்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர் பலியாகி உள்ளார். இந்த விபத்து காரணமாக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன.
சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், வெளிமாநிலங்களுக்கும் மாலை, இரவு நேரங்களில் தனியார் ஆம்னி பஸ்கள் இயங்கி வருகின்றன. அந்த வகையில் சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு நேற்று தனியார் ஆம்னி பேருந்து ஒன்று புறப்பட்டது.

இந்த பஸ்சில் 57 பயணிகள் இருந்தனர். இந்த ஆம்னி பேருந்து இரவில் கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பேருந்து சாலையில் கவிழ்ந்தது. இதில் ஒருவர் இறந்தார். மேலும் சிலர் காயமடைந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்தவுடன் போலீசார் வந்து பயணிகளை மீட்டனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இறந்தவரின் உடல் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கிடையே தான் தனியார் ஆம்னி பேருந்து கவிழ்ந்த விபத்தில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் காத்து நிற்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் பணியை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications