Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திமுக எம்எல்ஏ ஐயப்பன் பங்கேற்ற நிகழ்ச்சியில் பெட்ரோல் குண்டு வீச்சு.. கடலூரில் பெரும் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் திமுக எம்எல்ஏ ஐயப்பன் பங்கேற்ற நிகழ்ச்சியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் அருகே நல்லாத்தூரில் திருமண மண்டபத்தில் நடந்த திமுக நிர்வாகியின் இல்ல நிகழ்ச்சி நடைபெற்றது. அங்குள்ள திமுக நிர்வாகி மணிவண்ணன் என்பவரின் மகளின் மஞ்சள் நீராட்டு விழா அங்குள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது.

 Petrol bomb attack in DMK MLA Iyappan function in Cuddalore

இந்த நிகழ்ச்சியில் அங்குள்ள பலரும் கலந்து கொண்டிருந்தனர். மாலை ஆரம்பித்த இந்த நிகழ்ச்சி எந்தவொரு பிரச்சினையும் இல்லாமலேயே நடந்துள்ளது.

கடலூர் எம்எல்ஏ: அப்போது இரவு 8 மணியளவில் கடலூர் திமுக எம்எல்ஏ ஐயப்பன் இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ளார். அவர் உள்ளே செல்ல முயன்ற போதே, அங்கே வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென பீர் பாட்டிலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தூக்கி எரிந்துள்ளார்.

இதனால் அங்கே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும், பெட்ரோல் குண்டு வீச்சால் நல்வாய்ப்பாக யாருக்கும் எந்தவொரு காயமும் ஏற்படவில்லை. திமுக எம்எல்ஏ ஐயப்பனைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடந்ததாக அங்குள்ள திமுகவினர் கூறுகின்றனர்.

போலீஸ் விசாரணை: அங்கே ஒரு வித பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கடலூர் போலீஸ் கண்காணிப்பாளர் ராஜாராமன் விசாரணை நடத்தி வருகிறார்.

அங்குள்ள திமுகவினர் சிலர் எம்எல்ஏவை குறிவைத்தே இந்தத் தாக்குதல் நடந்துள்ளதாகக் கூறுகின்றனர். இதையடுத்து எம்எல்ஏவுக்கு யாராவது எதிரிகள் உள்ளனரா.. அவர்கள் யாராவது இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

பல கோணங்களில் விசாரணை: மேலும், சம்பவம் நடந்த இடத்தை சுற்றிலும் ரோந்து பணிகளை ஆரம்பித்துள்ள போலீசார், வாகன தணிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர். அந்த மர்ம நபர் யார் என்பதைக் கண்டறிந்து கைது செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளனர். எம்எல்ஏ ஐயப்பன் காரை நிறுத்திவிட்டு சில நிமிடங்களில் மண்டபத்திற்குள் செல்ல இருந்த நிலையில், இந்தச் சம்பவம் நடந்துள்ளது. எனவே, மர்ம நபர் எம்எல்ஏ ஐயப்பனை பின்தொடர்ந்து வந்து தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அங்கே சுற்றி இருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யத் தொடங்கியுள்ள போலீசார், அதன் அடிப்படையிலும் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். டூவீலரில் வந்த நபர் பெட்ரோல் குண்டு வீசியதாகக் கூறப்படும், இது குறித்த உறுதியான தகவல் இல்லை. அதேபோல எதற்காக இப்படித் தாக்குதல் நடத்தினார் என்ற என்ற காரணமும் தெரியவில்லை. கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் பங்கேற்ற நிகழ்ச்சியில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+