கடலூரில் இன்று பாமக பொதுக்கூட்டம்.. அன்புமணி ராமதாஸ் பங்கேற்பு
கடலூர்: தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகவுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியில் ராமதாஸ், அன்புமணி இடையே மோதல் நிலவி வருகிறது. பாமக தங்களுக்குத்தான் என்று இருவரும் மாறி மாறி உரிமை கொண்டாடி வருகின்றனர். இந்த அதிகார போட்டியால் பாமக தொண்டர்கள் அப்செட்டாகியுள்ளனர். பாமக நிலை என்னவாகும், கூட்டணி குறித்து என்ன முடிவு செய்ய போகிறார்கள் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. இந்நிலையில், கடலூா், திருப்பாதிரிப்புலியூரில் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் பங்கேற்கும் பொதுக்கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இதில் அவர் பல முக்கிய கருத்துகளை பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது. மற்ற அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரம் மற்றும் வியூகங்களில் பரபரப்பாக உள்ளனர். பாமகவில் தந்தை மகன் பனிப்போர் வெடித்து கொண்டிருக்கிறது. ராமதாஸ், அன்புமணி இடையே தொடர்ந்து பனிப்போர் நிலவுகிறது. இதன் காரணமாக பாமகவில் பிளவு ஏற்பட்டு, ராமதாஸ், அன்புமணி தனித்தனி அணியாக செயல்பட்டு வருகிறார்கள்.

பாமக பஞ்சாயத்து
பாமக பிரிவுக்கு திமுக தான் காரணம் என்று அன்புமணி ராமதாஸ் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். தந்தை மகன் இடையே அதிகார போட்டி உச்சத்தில் உள்ளது. சேலத்தில் கடந்த வாரம் ராமதாஸ் தலைமையில் பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் ராமதாஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்டு, கூட்டணி குறித்து முடிவு செய்யும் அதிகாரம் அவரிடமே ஒப்படைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
துரோகத்தை வீழ்த்துவோம்.. ராமதாஸ் கருத்தை வலுப்படுத்துவோம் என்று உறுதிமொழியும் எடுத்தனர். இது அன்புமணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மறுபக்கம் பாமகவில் நிலவும் பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வந்து, அவர்களை தங்கள் கூட்டணியில் உறுதிபடுத்தும் வேலையில் அதிமுக - பாஜக இறங்கியுள்ளது. சமீபத்தில் தமிழ்நாடு வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இதுகுறித்து நேரடியாகவே பாஜக நிர்வாகிகளிடம் பேசியுள்ளார்.
அன்புமணி பொதுக்கூட்டம்
பாமக வருகை தேசிய ஜனநாயக கூட்டணியை வலுப்படுத்தும் என்று அவர்கள் நம்புகிறார்கள். அதேநேரத்தில் ராமதாஸ் தலைமையிலான பாமக திமுக கூட்டணியில் இணைவதற்காக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. பாமகவில் எப்போது பிரச்சனைகள் முடிவடையும் என்று அந்தக் கட்சியின் தொண்டர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இந்நிலையில், கடலூர், திருப்பாதிரிப்புலியூர் தேரடி வீதியில் அன்புமணி ராமதாஸ் பங்கேற்கும் பொதுக்கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மாவட்டச் செயலா் சண்.முத்துகிருஷ்ணன் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில், தமிழக அரசு தொடா்ந்து கடலூா் மாவட்ட மக்களுக்கு துரோகம் இழைத்து வருகிறது.
முக்கிய அறிவிப்பு
கடலூர் மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களை கையகப்படுத்தி என்எல்சி நிறுவனத்திற்கு தாரை வார்த்து சொந்த மண்ணில் மக்களை அகதியாக்கிய நிலையில், கடலூர் சிப்காட் விரிவாக்கத்திற்கு குடிகாடு, தியாகவல்லி ஊராட்சிகளில் நிலங்கள் கையகப்படுத்த போவதாக அறிவித்துள்ளது.
இந்நிலையில், கடலூரில் புதன்கிழமை மாலை 5 மணியளவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில், பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று பேசவுள்ளார். மாநில சொத்து பாதுகாப்பு குழுத் தலைவா் ரா.கோவிந்தசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனா். இக்கூட்டத்தில் நிர்வாகிகள், பொதுமக்கள், விவசாயிகள் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். இதில் அவர் முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
-
எடப்பாடி பழனிசாமிக்கே ஷாக்.. மாப்பிள்ளை அவர் தான்.. ஆனால் சட்டை? பாஜக வெயிட்டிங் கேம் பின்னணி என்ன? -
அதிமுக கூட்டணியில் எவ்வளவு சீட்? அமித்ஷாவை சந்தித்த டிடிவி தினகரன்.. அடுத்து அன்புமணியுடன் மீட்டிங் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்!












Click it and Unblock the Notifications