கள்ளக்குறிச்சி கலவரம்.. வன்முறையாளர்களை பிடிக்க "நம்பர் பிளேட்!" போலீஸ் ஸ்கெட்ச்
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கலவரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்களின் பதிவெண்கள் மூலம் அதன் உரிமையாளர்களை தேடும் பணியில் தனிப்படை போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் இயங்கி வந்த தனியாா் பள்ளி மாணவி இறப்பு தொடா்பாக, நீதிகேட்டு மாணவியின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் 67க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரையானது. பள்ளி வாகனங்கள் மட்டுமின்றி, காவல்துறையினரின் வாகனங்களையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தினர். இதுதொடர்பாக 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். மாணவி மர்ம மரணம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, கள்ளக்குறிச்சி கலவரத்தை விசாரிக்க 18 காவல்துறை அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு, அந்தக் குழுவினர், சம்பவம் நடைபெற்ற கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். பள்ளியில் ட்ரோன் கேமராவை பறக்கவிட்டு காட்சிகளை பதிவு செய்தனர்.
மேலும், பள்ளி வளாகம், வகுப்பறைகள், மாணவி இறந்து கிடந்த இடம், பள்ளி தாளாளர் வீடு உள்ளிட்ட இடங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. கலவரத்தின் போது எரிக்கப்பட்ட போலீஸ் வாகனங்கள், பள்ளி பேருந்துகளில் தடயங்களை சேகரிக்கும் பணியிலும் அதிகாரிகள் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி பள்ளியில், மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சிறப்பு புலனாய்வுக்குழு அதிகாரிகளும் ஆய்வு மேற்கொண்டனர்
இதனிடையே, கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் கடந்த 14-ம் தேதி ஏற்பட்ட வன்முறையின்போது 141 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். ஆனால் இதுவரை இருசக்கர வாகனங்களின் உரிமையாளர்கள் யாரும் தங்களது வாகனங்களை திரும்பப் பெற முன் வரவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.
வாகனங்களை திரும்ப வாங்க வந்தால், வன்முறையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி கைது செய்யப்படலாம் என்ற அச்சம் காரணமாக, வாகனங்கள் பெறுவது தொடர்பாக காவல் நிலையத்தை யாரும் அணுகவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். எனவே, பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்களின் பதிவெண்களை வைத்து, அதன் உரிமையாளர்களை தேடும் பணியில் தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications