கடலூரில் லாரி ஓட்டுநர்களிடம் வழிப்பறி.. கொள்ளையன் விஜய் என்கவுன்ட்டரில் கொலை.. என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

கடலூர்: கடலூரில் லாரி ஓட்டுநர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த புதுச்சேரியைச் சேர்ந்த கொள்ளையன் விஜய் போலீசார் என்கவுன்ட்டரில் கொலை செய்யப்பட்டுள்ளார். புதுசத்திரம் பகுதியில் 6 பேர் கொண்ட கும்பல் லாரி ஓட்டுநர்களை அரிவாளால் வெட்டி வழிப்பறியில் ஈடுபட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கொள்ளையன் விஜய்-ஐ சுற்றி வளைத்த போது, போலீசாரை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்றுள்ளார். அப்போது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில், கொள்ளையன் உயிரிழந்தார்.

புதுச்சேரி - நாகை தேசிய நெடுஞ்சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதில் எம்.புதூர் பகுதியில் வாகனங்களை மறித்து 6 பேர் கொண்ட மர்மக்கும்பல் வழிப்பறியில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் எழுந்தன. இந்த நிலையில் புதுச்சேரியில் இருந்து மயிலாடுதுறைக்கு சென்ற லாரியை மறித்த கும்பல், லாரி ஓட்டுநர் காளிமுத்துவை அரிவாளால் தாக்கி செல்ஃபோன் மற்றும் பணத்தை பறித்துள்ளது.

cuddalore Police encounter crime

அதேபோல் மற்றொரு லாரி ஓட்டுநரான மணிமாறன் என்பவரையும் அரிவாளால் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில நாட்களாகவே இந்த சம்பவம் தொடர்ந்து நடைபெற்ற நிலையில் கடலூர் எஸ்பி ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இதனால் கடலூர் மாவட்டம் முழுவதும் போலீசார் அலர்ட்டாக இருந்தனர்.

இதனால் தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டது. அதேபோல் தேசிய நெஞ்சாலையில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது கொள்ளையர்கள், சிதம்பரம் - கடலூர் சாலையில் இருந்து கிராமத்திற்கு செல்லும் குறுக்கு சாலையில் கொள்கையர்கள் இருப்பது தெரிய வந்தது.

இதன்பின் கொள்ளையர்களை போலீசார் மடக்கி பிடித்துள்ளனர். அப்போது கொள்ளையன் விஜய், போலீசார் 2 பேரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளார். இதனையடுத்து தற்காப்புக்காக போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் விஜய் என்கவுன்ட்டரில் உயிரிழந்தார். புதுச்சேரியைச் சேர்ந்த கொள்ளையனான விஜய்-க்கு 19 வயது மட்டுமே ஆகிறது.

ஆனால் கொள்ளையன் விஜய் மீது 30க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. 2 நாட்களுக்கு முன் மதுரை சிந்தாமணி பகுதியில் கிளாமர் காளி கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ஒருவர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பேசுகையில், இன்று அதிகாலை பைபாஸ் பகுதியில் 3 இடங்களில் லாரி ஓட்டுநர்களிடம் வழிப்பறி செய்து, அரிவாள் வெட்டு நடந்துள்ளது.

இதில் ஈடுபட்ட கும்பலின் தலைவன் முட்டை விஜய். எம்.புதூர் அருகே ஒரு தோப்பில் மறைந்திருந்த நிலையில், தகவலின் பேரில் தனிப்படையினர் அவர்களை பிடிக்க முயன்றுள்ளனர். அப்போது அவர் காவலரை தாக்க முற்பட்டதால், அவர் மீது வேறு வழுயின்றி ஆய்வாளர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார் என்று தெரிவித்துள்ளார். அதேபோல் கடந்த 2 வாரங்களாகவே ஏராளமானோர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு பிரச்சனை அதிகரித்துள்ள நிலையில், போலீசார் தொடர் என்கவுன்ட்டர் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+