திமுக நிர்வாகியை தாக்கிய சீமான்.. காரை மறித்து கூச்சலிட்டதால் மோதல்! விருத்தாச்சலத்தில் பதற்றம்
கடலூர்: விருத்தாசலத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொள்ள நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்றிருந்தார். அப்போது சீமானுக்கு எதிராக திமுக நிர்வாகி ஒருவர் கோஷமிட்ட நிலையில், அவரை காரில் இருந்து இறங்கி சீமான் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் அங்குப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்தாண்டு தொடக்கத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பணிகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் இறங்கியுள்ளன. ஒரு பக்கம் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கும் அதேநேரம் மற்றொரு பக்கம் மக்களைச் சந்திக்கும் வகையில் பிரச்சாரக் கூட்டங்கள், மாநாடும் தொடர்ந்து நடந்து வருகிறது.

அதன்படி கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்கும் வகையில் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்கம் சார்பில் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் இந்தக் கூட்டம் நடந்து. 20 அம்ச கோரிக்கைகள் முன்வைத்து அரசுப் பணியாளர் சங்கத்தினர் இந்த மாநில மாநாட்டை நடத்தி இருந்தனர்.
இந்தக் கூட்டத்தில் சீமான் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். மாநாட்டில் பேசிய சீமான், அரசுப் பணியாளர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினார். மாநாடு முடிந்தவுடன் அங்கிருந்த கிளம்ப ஆயத்தமானார். காரில் அவர் ஏறினார். அப்போது அங்கு இருந்த திமுக நிர்வாகி சீமான் காரை மறித்துள்ளார்.
சீமான் ஒழிக என கோஷமிட்டுள்ளார். மேலும், சில மோசமான வார்த்தைகளையும் சொல்லி சீமானை திட்டியதாகச் சொல்லப்படுகிறது. இதையடுத்து அங்குக் கூடியிருந்த தொண்டர்கள் அவரை சுற்றி வளைத்தனர். மேலும், ஆத்திரமடைந்த சீமான், காரில் இருந்து இறங்கி வந்த அந்தப் பிரமுகரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு அங்கிருந்தவர்கள் சீமானை அழைத்துச் சென்றனர்.
சீமான் தாக்குதல் நடத்திய நபர், கிழக்கு மாவட்ட திமுக வர்த்தக அணி நிர்வாகி ரங்கன் என்று கூறப்படுகிறது. அவரை கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சியினர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா











Click it and Unblock the Notifications