கடலூர் டாஸ்மாக் கடைகளில் தீபாவளி ரெய்டை தடுக்க மாஸ்டர் பிளான் போட்ட மேலாளருக்கு மறக்க முடியாத பரிசு
கடலூர்: தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் ஆர்டிஓ, சார் பதிவாளர் அலுவலகங்களிலும், பல அரசு அலுவலகங்களிலும், டாஸ்மாக் கடைகளிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிரமாக சோதனை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் கடலூர் மாவட்ட டாஸ்மாக் கடைகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தாமல் இருக்க விரும்பிய டாஸ்மாக் மேலாளர், லஞ்ச ஒழிப்புத் துறை இன்ஸ்பெக்டருக்கு ரூ.25 ஆயிரம் லஞ்சம் கொடுக்க முயன்றதாக கைதாகி உள்ளார்.
கடலூர் முதுநகரில் இயங்கி வரும் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் மேலாளராக செந்தில்குமார் என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடலூர் நகரைச் சேர்ந்தவர் ஆவார். பொதுவாகவே ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகை நெருங்கும் சமயத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார், ஆர்டிஓ அலுவலகங்கள், சார் பதிவாளர் அலுவலகங்கள், தாசில்தார் அலுவலகம் மற்றும் பணம் அதிகம் புழங்கும் அரசு அலுவலகங்கள் மற்றும் டாஸ்மாக் கடைகளை குறிவைத்து சோதனை நடத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

கடந்த சில நாட்களாகவே தமிழ்நாடு முழுவதும் சார் பதிவாளர் அலுவலங்களில் லஞ்ச ஒழிப்பு தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். அதேபோல் டாஸ்மாக் கடைகளிலும் சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த சூழலில் கடலூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் செந்தில்குமார், கடந்த சில நாட்களுக்கு முன்பு லஞ்ச ஒழிப்புத் துறை இன்ஸ்பெக்டர் திருவேங்கடத்தை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது அவர் தீபாவளி பண்டிகையையொட்டி டாஸ்மாக் கடைகள் மற்றும் டாஸ்மாக் தொடர்பான அலுவலகங்களில் சோதனை நடத்தாமல் இருக்க தான் லஞ்சமாக ரூ.25 ஆயிரம் தருவதாகவும், பணத்தை பெற்றுக் கொண்டு சோதனை நடத்தாமல் பார்த்துக் கொள்ளும்படி தெரிவித்தாராம். இதுபற்றி இன்ஸ்பெக்டர் திருவேங்கடம், லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி (பொறுப்பு) சத்தியராஜிடம் தெரிவித்தார்.

இதையடுத்து லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார், டாஸ்மாக் மேலாளரை கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்தார்கள். அதன்படி டாஸ்மாக் மேலாளர் செந்தில்குமார், அலுவலக இளநிலை உதவியாளர் ராதாகிருஷ்ணன் என்பவர் மூலம் ரூ.25 ஆயிரத்தை, இன்ஸ்பெக்டர் திருவேங்கடத்திடம் கொடுத்தனுப்பினாராம். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார், இருவரையும் கையும் களவுமாக மடக்கி பிடித்து கைது செய்தனர். செந்தில்குமார், ராதாகிருஷ்ணன் ஆகிய 2 பேரையும் கடலூர் லஞ்ச ஒழிப்புத்துறை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications