கடலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சாமிக்கு விட்ருக்கேன் சார்! மண்டையில் டிங்கரிங் செய்த புள்ளிங்கோ! பட்டி பார்த்து அனுப்பிய போலீஸ்!

Google Oneindia Tamil News

கடலூர் : கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் புள்ளிங்கோ ஸ்டைலில் முடிவெட்டி வந்த பள்ளி கல்லூரி மாணவர்கள் சிதம்பரம் பேருந்து நிலையத்தில் வைத்து முடிதிருத்தம் செய்து அறிவுரை வழங்கி அனுப்பிய போலீசாரின் செயல் பொதுமக்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது.

Recommended Video

    சிதம்பரத்தில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு முடிதிருத்தம் செய்து அறிவுரை வழங்கி அனுப்பிய போலீசார்

    திரைப்படங்களில் வரும் நடிகர்களைப் பார்த்து பள்ளி மாணவர்கள் பலரும் பள்ளிக்குச் செல்லும் போது காதுகளில் கம்மலை மாட்டிக்கொண்டும் புள்ளிங்கோ ஸ்டைலில் முடியை வெட்டிக்கொண்டு, முடியில் கலரிங் செய்து வலம் வருகின்றனர்.

     ஏன்டா.. குரைத்தது ஒரு குத்தமாடா! நாயையும் அதன் உரிமையாளரையும்.. மண்டையை பிளந்த இளைஞர்! வெறிச்செயல் ஏன்டா.. குரைத்தது ஒரு குத்தமாடா! நாயையும் அதன் உரிமையாளரையும்.. மண்டையை பிளந்த இளைஞர்! வெறிச்செயல்

    பல நேரங்களில் ஆசிரியர்கள் மாணவர்கள் காதில் போட்டிருந்த தோடுகளைக் கழட்டச் சொல்லியும், அந்த பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை சொல்லியும் அனுப்பிவைத்து வருகின்றனர். ஆனால் அதனை மாணவர்கள் கண்டுகொள்ளாமல் சுற்றித் திரிகின்றனர்.

    புள்ளிங்கோ ஸ்டைல்

    புள்ளிங்கோ ஸ்டைல்

    பலமுறை புள்ளிங்கோ ஸ்டைலில் சலூன் கடைக்காரர்கள் முடி வெட்டி, கலர் அடிக்கக்கூடாது. மீறி நடந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சலூன் கடைக்காரர்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்து வந்தாலும் அதனையும் ஒரு சில கடைக்காரர்கல் கண்டு கொள்ளாமல் மாணவர்களின் விருப்பத்திற்கேற்றார் போல் முடி வெட்டி வருகின்றனர்.

    சிதம்பரம் போலீஸ்

    சிதம்பரம் போலீஸ்

    இந்நிலையில் தான் சிதம்பரம் போலீசார் எடுத்த நடவடிக்கை சமூக வலைதளங்களில் பாராட்டுதலை பெற்று வருகிறது. சிதம்பரத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள், ஐடிஐ மாணவர்கள், பாலிடெக்னிக் மாணவர்கள், என சிதம்பரம் நகருக்கு வந்து செல்கின்றனர். மாணவர்களில் பெரும்பாலானோர் சென்னை பாணியில் புள்ளிங்கோ மாடலில் முடி வளர்த்து வருவது கலாச்சாரமாக மாறி வருவதால் மாணவர்களிடையே கடும் மோதல் போக்கும் உருவாகி வருகிறது.

    அதிரடி நடவடிக்கை

    அதிரடி நடவடிக்கை

    இதனை தடுக்கும் வகையில் சிதம்பரம் நகர காவல் நிலைய உதவி ஆய்வாளர் நாகராஜ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது தலை முழுவதும் அதிக முடி வைத்திருந்த கல்லூரி மாணவர்கள் ஐடிஐ மாணவர்கள் பள்ளி மாணவர்களை பிடித்த போலீசார் பேருந்து நிலையம் என்றும் பார்க்காமல் மாணவர்கள் இப்படித்தான் முடி வெட்டி இருக்க வேண்டும் என கூறி அவர்களுக்கு அங்கேயே முடி திருத்தம் செய்யப்பட்டது.

    பொதுமக்கள் பாராட்டு

    பொதுமக்கள் பாராட்டு

    மேலும் மாணவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டு அனுப்பி வைத்தனர். இதில் கல்லூரி மாணவர் ஒருவர் எக்ஸாம் முடிந்த பிறகு மொட்டை அடிக்க போறேன் சார் என்று சொன்னது போலீசார் மற்றும் அங்கிருந்த பொதுமக்கள் இடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது. மாணவர்களுக்கு போலீசார் முடி திருத்தம் செய்வது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

    English summary
    In Chidambaram of Cuddalore district, the action of the police who sent the school and college students with haircuts in the Pullingo style to the Chidambaram bus stand after giving them advice has been well received by the public.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X