பெண் விவகாரம்.. கை, கால்களை கட்டி அடித்த கிராம மக்கள்.. கடலூர் அருகே பரபரப்பு

இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்த போலீசை பொதுமக்கள் அடித்தனர்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    தமிழகத்தில் நடந்துள்ள சில குற்ற நிகழ்வுகள்- வீடியோ

    கடலூர்: ஆசை ஆசையாக பிரியாணி பொட்டலங்கள், மதுபானங்களை வாங்கிக் கொண்டு அந்த இளம்பெண்ணை நெருங்கும்போதுதான் போலீசுக்கு அந்த அதிர்ச்சி காத்திருந்தது. அது என்ன தெரியுமா?

    வேப்பூர் ஸ்டேஷனில் ஏட்டாக இருப்பவர் ரமேஷ். வேப்பூர் அருகிலேயே ராமநாதபுரம் என்ற கிராமம் இருக்கிறது. இந்த கிராமத்திற்கு ஒரு கேஸ் விஷயமாக ரமேஷ் சென்றபோது, அனைவரிடமும் விசாரணை நடத்தினார். அப்போது 30 வயது இளம்பெண்ணிடம் வழக்கம்போல் விசாரணை நடத்தினார்.

    ஆபாச நெடி வார்த்தைகள்

    ஆபாச நெடி வார்த்தைகள்

    அப்போதுதான் அந்த பெண்ணின் புருஷன் வெளிநாட்டில் இருப்பதால் தனியாக வாழ்ந்து வருவதும் தெரியவந்தது. உடனே ரமேஷ் அந்த பெண்ணின் செல்போன் நம்பரை வாங்கி வைத்து கொண்டார். நம்பர் கிடைத்த நாளிலிருந்தே போனில் அந்த பெண்ணுடன் பேச தொடங்கிவிட்டார். பேச்செல்லாம் ஒரே ஆபாச நெடிதான். இந்த தொல்லையை தாங்காத அந்த பெண் சொந்தக்காரர்களிடம் போய் சொல்லிவிட்டார்.

    பொதுமக்கள் தந்த ஐடியா

    பொதுமக்கள் தந்த ஐடியா

    அவர்களும் மேலதிகாரிகளிடம் இந்த பிரச்சனையை கொண்டுபோனால் அவர்களுக்குளேயே வைத்து முடித்துவிடுவார்கள், சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் மீது நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள் என்பதால், எல்லோரும் சேர்ந்து ஒரு முடிவு செய்தார்கள். அதன்படி, "ரமேஷ் மீண்டும் செல்போனில் பேசினால், எப்படியாவது கமுக்கமாக பேசி வீட்டிற்கு வரவழைத்துவிடு, மீதியை நாங்கள் பார்த்து கொள்கிறோம்" என்றனர்.

    மதுபாட்டில், பிரியாணி

    மதுபாட்டில், பிரியாணி

    அதன்படி ரமேஷ் நேற்று முன்தினம் ராத்திரி வழக்கம்போல் போனை எடுத்து ஆபாச பேச்சை ஆரம்பித்தார். ஆனால் இளம்பெண்ணோ, "சரி.. வீட்டுக்கு வாங்களேன்..." என்றார். இப்படி ஒரு பதிலை கொஞ்சமும் எதிர்பார்க்காத ரமேஷ் அவசர அவசரமாக கிளம்ப ஆரம்பித்தார். நீட்டாக டிரஸ் பண்ணி கொண்டு கிளம்பினார். போகும் வழியில் மதுபாட்டில்கள், பிரியாணி பொட்டலங்களை வாங்கி கொண்டார்.

    கை, கால்கள் கட்டினர்

    கை, கால்கள் கட்டினர்

    ராத்திரி சரியாக 8 மணிக்கு பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்தார். கையில் சரக்கு, பிரியாணி பொட்டலங்களுடன் ஆசை ஆசையாக அந்த பெண்ணிடம் நெருங்கினார். அந்த சமயத்தில மறைந்திருந்த உறவினர்கள் கபால் என்று ரமேஷை பிடித்து கொண்டனர். எல்லோரும் சேர்ந்து அவரது கை, கால்களை கயிற்றால் கட்டிவிட்டனர். பிறகு சொந்தக்காரர்கள் உட்பட கிராம மக்களே ரமேஷை அடித்து துவைத்தனர். ஒரு போலீஸ்காரர் ஊர்மக்களிடம் இப்படி தர்மஅடி வாங்குகிறார் என்று தெரிந்து சப்-இன்ஸ்பெக்டர் டைமன்துரை அங்கே வந்தார்.

    சிறை வைத்தனர்

    சிறை வைத்தனர்

    பிறகு ரமேஷின் கை, கால்களில் கட்டியிருந்த கயிறை அவிழ்த்தார். உடனே ரமேஷ் அங்கிருந்து பின்பக்கமாக எகிறி குதித்து ஓடிவிட்டார். கயிற்றால் கஷ்டப்பட்டு கட்டியிருந்தால், இப்படி திடுதிப்பென்று உள்ளே நுழைந்து அவிழ்த்து விட்டாரே என்று சப்-இன்ஸ்பெக்டர் டைமன்துரை மீது கிராம மக்கள் ஆத்திரமடைந்து தகராறு செய்தனர். பின்னர் அவரையும் சரமாரியாகி தாக்கி வீட்டுக்குள்ளே சிறை வைத்து விட்டனர். பிறகு கிராம மக்களே திட்டக்குடி துணை எஸ்.பி.க்கு தகவல் அளித்தனர்.

    உறுதி தந்தார்

    உறுதி தந்தார்

    இதை கேட்டு அதிர்ந்த அவர், கிராம மக்களிடம் போனிலேயே சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். இறுதியில், சம்பந்தப்பட்ட பெண் புகார் அளித்தார் விசாரணை நடத்தி குற்றவாளிக்கு உரிய தண்டனை வாங்கி தருகிறோம் என்று உறுதி தந்தார். இதையடுத்தே ஊர் மக்கள் அமைதியானார்கள். இப்படி ஏட்டுவை ஊர்ஜனங்கள் கட்டி வைத்து அடித்ததும், மீட்க போன சப்-இன்ஸ்பெக்டரை சிறைவைத்ததும் பெரும் பரபரப்பாகிவிட்டது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+