எல்லாமே மாறப்போகுது! கடலூரில் வருகிறது பிரம்மாண்ட பசுமை வளத்துறைமுகம்.. தமிழக அரசு சூப்பர் முடிவு
கடலூர்: கடலூரில் பசுமை வளத்துறைமுகம் அமைக்க தமிழ்நாடு அரசு திட்டம் போட்டுள்ளது. விரிவான சாத்தியக் கூறு அறிக்கை தயார் செய்ய டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு.
கடலூரில் 10 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளை கையாளக் கூடிய புதிய துறைமுகம் அமைக்க தமிழ்நாடு அரசு திட்டம். விரிவான சாத்தியக் கூறு அறிக்கை தயார் செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது. மத்திய பகுதிகளுக்கு தேவையான சரக்குகளை கையாளக் கூடிய வகையில் பசுமை துறைமுகமாக இது அமைய உள்ளது.

ஆண்டுக்கு 10 மில்லியன் மெட்ரிக் டன் (MMT) சரக்குகளை கையாளும் வகையில் இந்த துறைமுகத்தை அமைக்க திட்டம் போடப்பட்டு உள்ளது.
சமீபத்தில் கடலூர் தற்போது உள்ள துறைமுகம் சுமார் 50 ஆண்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் தனியாருக்கு வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே தொடர் மண்மேடு காரணமாக துறைமுகம் செயலிழந்தது. தமிழ்நாடு கடல்சார் வாரியம் (TNMB) ஏற்கனவே வடக்கு மற்றும் தெற்கு பிரேக்வாட்டரை நீட்டிப்பதற்காக ₹160 கோடி செலவிட்டுள்ளது. 1 & 2 வார்ஃப்கள் (240 மீ நீளம்) கட்டுமானம் மற்றும் சுமார் 9 மீ வரை கால்வாயை ஆழப்படுத்தும் பணிகள் நடந்தன.
கடலூர் துறைமுகம் வங்காள விரிகுடாவில் உப்பனார் மற்றும் பரவனாறு நதிகள் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ள intermediate anchorage துறைமுகமாகும். நங்கூரம் போடும் இடம் 0.5 கடல் மைல் தொலைவில் 8-10 மீ ஆழம் உள்ளது.
துறைமுகம் தூத்துக்குடி: இது போக தூத்துக்குடியில் உள்ள விஓசி துறைமுகம் அருகே 500 மெகாவாட் திறன் கொண்ட கடலோர காற்றாலைகள் அமைக்கப்படும் பணிகள் இன்னும் சில நாட்களில் தொடங்கப்பட உள்ளன.அணு மின் நிலையம், அனல் மின்நிலையம் மட்டும் இன்றி புகையை வெளியேற்றாத, இயற்கைக்கு பாதிப்பு ஏற்படுத்தாத மின்சாரத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளில் தமிழ்நாடு தீவிரம் காட்டி வருகிறது. இதை மனதில் வைத்தே தூத்துக்குடியில் உள்ள ஸ்பிக் தொழிற்சாலை வளாகத்தில் மிதக்கும் சூரிய ஒளி மின் நிலையத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்.
150 கோடி ரூபாயில் இந்த மின் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. 75 ஏக்கர் பரப்பளவு குளத்தில் இந்த சூரிய ஒளி மின் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த அளவிற்கு சூரிய ஒளி மின்சாரத்திலும் தமிழ்நாடு கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் தமிழ்நாடு அரசு சூரிய ஒளி மின்சாரத்தில் புதிய ரெக்கார்ட் ஒன்றை படைத்து உள்ளது. இதுவரை இல்லாத அளவில், சூரிய ஒளி மின் உற்பத்தி 4141 MW அளவில் உச்சம் தொட்டு இருக்கிறது. இன்னொரு பக்கம் காற்றாலை மின்சாரத்திலும் டென்மார்க்கிற்கு இணையாக தமிழ்நாடு கவனம் செலுத்தி வருகிறது.
தூத்துக்குடி வேகமாக வளர்ந்து வரும் நிலையில்தான் கடலூரில் 10 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளை கையாளக் கூடிய புதிய துறைமுகம் அமைக்க தமிழ்நாடு அரசு திட்டம். விரிவான சாத்தியக் கூறு அறிக்கை தயார் செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது. மத்திய பகுதிகளுக்கு தேவையான சரக்குகளை கையாளக் கூடிய வகையில் பசுமை துறைமுகமாக இது அமைய உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications