காட்டுமன்னார்கோவிலில் மதுபோதையில் தகராறு! வீடு புகுந்து 3 பேருக்கு கத்திக் குத்து! போலீஸார் குவிப்பு

Subscribe to Oneindia Tamil

கடலூர்: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே மது போதையில் தகராறு ஏற்பட்டதை அடுத்து வீடு புகுந்து பயங்கர ஆயுதங்களால் தாக்கியதில் 3 பேருக்கு கத்திக் குத்து ஏற்பட்டதால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது. இதனால் அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

காட்டுமன்னார்கோவிலை அடுத்த மா.ஆதனூர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் ராஜா (20). அவரது நண்பர்கள் கபில்தாஸ் (22), பரணிதரன் (21). இவர்கள் மூவரும் நேற்று முன்தினம் ஆதனூர் கதவணையில் அமர்ந்து மது அருந்தியதாகக் கூறப்படுகிறது.

kattumannar koil dispute

அப்போது மயிலாடுதுறை மாவட்டம், சி.புளியூர் பகுதியைச் சேர்ந்த மார்ட்டின் மற்றும் அன்பு ஆகிய இருவரும் மது போதையில் அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வேகமாகச் சென்றதாகத் தெரிகிறது.

இதனை அங்கு அமர்ந்திருந்த கார்த்திக் ராஜா மற்றும் அவரது நண்பர்கள் தட்டிக் கேட்டனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் அது தகராறாக மாறியுள்ளது.

இதையடுத்து கார்த்திக் ராஜா மற்றும் அவரது நண்பர்கள் அங்கிருந்து சென்றுள்ளனர். இந்நிலையில், மார்ட்டின் மற்றும் அன்பு தரப்பினர் சி.புளியூர் பகுதியில் இருந்து 15-க்கும் மேற்பட்ட நபர்களை அழைத்து வந்து, கார்த்திக் ராஜாவின் வீட்டிற்குள் புகுந்து கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இந்தத் தாக்குதலில் கார்த்திக் ராஜா, கபில்தாஸ், பரணிதரன் உள்ளிட்டோர் மற்றும் அவர்களது உறவினர்கள், ஊர் பொதுமக்கள் காயமடைந்ததாகத் தெரிகிறது.

இதுகுறித்து காட்டுமன்னார்கோவில் உதவி ஆய்வாளர் சையத் அப்சல் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். காயமடைந்தவர்கள் காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

இதில் கார்த்திக் ராஜா, பரணிதரன், கபில் தாஸ் ஆகிய மூவரும் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதையடுத்து அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்கும் வகையில் போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+