"நேரம் சரியில்லேன்னா 108-ல தான் போவே".. காக்கி சட்டை + ஹெட்போன் = கலக்கும் ஏட்டு சிவபெருமாள்!
சாலை விதிகள் குறித்த ஏட்டு சிவபெருமாள் பாடிய பாடல் வைரலாகிறது.
Recommended Video
கடலூர்: "நேரம் சரியில்லேன்னா 108-ல தான் போவே" என்று ரெக்கார்டிங் தியேட்டரில் காக்கி சட்டை உடையுடன் காதில் ஹெட்போன் மாட்டிக் கொண்டு பாடுகிறார் சிவபெருமாள்!
இதற்கு முந்தைய கால கட்டத்தைவிட, இப்போதெல்லாம் போக்குவரத்து போலீசார் சாலை விதிகளை பல வழிகளில் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு காரணம், விபத்தில் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் அதிகம் என்பதால்தான்.

இதற்காக விழிப்புணர்வுகளை துறை ரீதியாக போலீசார்கள் முன்னின்று செய்து வந்தாலும், தனிநபர் விழிப்புணர்வு பிரச்சாரம் என்பது ரொம்பவும் குறைவுதான். அப்படிப்பட்ட வெகுசிலரில் ஒருவர்தான் ஏட்டு சிவபெருமாள். சிதம்பரம் அருகே உள்ள மருதூர் ஸ்டேஷனில்தான் இவர் ஏட்டாக வேலை பார்க்கிறார்.
சாலை விதிகளை மதிப்பது குறித்து பாடல் ஒன்றை பாடியுள்ளார். ரிக்கார்டிங் தியேட்டரில் நாம் பலவித ஆட்களை பார்த்திருப்போம். ஆனால் போலீஸ்காரர் ஒருவர் காக்கி சட்டையில் ஹெட்-போனை காதில் மாட்டி கொண்டு பாடுவதை பார்க்க வித்தியாசமாக இருக்கிறது.
சாலை விதிகளை மதிப்பது குறித்த பாடல் இது என்பதால், ஒரு வண்டியை சிவபெருமாள் விடவில்லை. கார், பஸ், டூவீலர் என அனைத்து வாகன ஓட்டிகளுக்கும் எச்சரிக்கை விடுத்து பாடுகிறார். "போடுங்க.. ஹெல்மெட்டை போடுங்க.. உங்களுக்கு விபத்து ஏற்பட்டால் உயிரிழப்பை தடுக்கலாம்" என்று தொடங்குகிறது பாடல்.

காரில் சீட் பெல்ட் போடுங்க, டாடா ஏசியில் ஆட்களை ஏற்றாதே, இன்சூரன்ஸ் இல்லா வாகனத்தை ஓட்டாதே, படியில் பயணம் நொடியில் மரணம், சாலைவிதிகளை மதிக்கணும், சாவே இல்லாமல் வாழ்ந்து காட்டு, செல்போனில் பேசிக்கிட்டு வாகனத்தை ஓட்ட கூடாது, ஓடும் பேருந்தில் ஓடிப்போயி ஏறாதே, நேரம் சரியில்லேன்னா 108-ல போவேதான், ஓசியில வண்டி வாங்கி ஓவர் ஸ்பீடா ஓட்டக்கூடாது, குடித்துவிட்டு வாகனம் ஓட்டாதே, போதையில் பயணமுங்க பாதையில் மரணமுங்க, லைசென்ஸ் இல்லாமல் வாகனத்தை ஓட்டக்கூடாது" என்ற வரிகள் அடங்கி உள்ளது.
இந்த வீடியோவில் நடுநடுவே சாலை விபத்து காட்சிகளும் காட்டப்படுகின்றன. சிவபெருமாள் எழுதி, பாடி, வெளியிட்டுள்ள, இந்த வீடியோதான் சோஷிய மீடியாவில் வெளியாகி, மக்களின் கவனத்தை ரொம்பவே ஈர்த்து வருகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications