பண்ருட்டியில் மீண்டும் போட்டி...வீடு பால்காய்ச்சி தேர்தல் பணிகளை ஜரூராக தொடங்கிய 'தவாக' வேல்முருகன்
பண்ருட்டி: தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி. வேல்முருகன் மீண்டும் பண்ருட்டி தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளார். இதற்காக பண்ருட்டியில் உள்ள வீட்டை சீரமைத்து கணபதி ஹோமத்துடன் தேர்தல் பணிகளையும் தொடங்கிவிட்டார் வேல்முருகன்.
2001-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை பண்ருட்டி தொகுதியின் பாட்டாளி மக்கள் கட்சி எம்.எல்.ஏ.வாக இருந்தார் வேல்முருகன். 2011 சட்டசபை தேர்தலில் நெய்வேலி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்.

பாமக தலைமையுடனான கருத்து வேறுபாட்டால் தமிழக வாழ்வுரிமை கட்சியை தொடங்கினார் வேல்முருகன். 2016 சட்டசபை தேர்தலில் நெய்வேலி தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் தோல்வியை எதிர்கொண்டார் வேல்முருகன்.

தற்போதைய சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் வேல்முருகனின் தவாக இடம்பெறுகிறது. கடந்த சில மாதங்களாகவே பண்ருட்டி தொகுதியை குறித்து வேல்முருகன் களப்பணிகளையும் தொடங்கினார். இந்த நிலையில் பண்ருட்டி பேருந்து நிலையம் பின்புறம் உள்ள தமது வீட்டை சீரமைத்து கணபதி ஹோம பூஜையுடன் பால் காய்ச்சி தேர்தல் பணிகளை அதிகாரப்பூர்வமாக தொடங்கினார் வேல்முருகன். இதனைத் தொடர்ந்து தமது கட்சி நிர்வாகிகளுடன் வேல்முருகன் புதிய வீட்டில் தேர்தல் பணி தொடர்பாக ஆலோசனைகளை நடத்தினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications