வீட்டில் தனியாக இருந்த சாந்தி.. சேலை, ஜாக்கெட் கிழிக்கப்பட்டு அரைநிர்வாண கோலம்.. கொடூர கொலை
கடலூர்: கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் 45 வயது பெண், அரை நிர்வாண கோலத்தில் கொலை செய்யப்பட்டு வீட்டில் பிணமாக கிடந்தார். அவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டாரா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்,
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே குருக்கத்தான் சேரி பகுதியை சேர்ந்தவர் சாந்தி வயது (45). இவர் விருத்தாசலம் அடுத்த ஆலடி ரோடு பகுதியில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். இவரது ஒரே மகள் திருமணமாகி வெளியூரில் வசிக்கிறார்.
சாந்தி அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்துள்ளார்.இந்நிலையில் கோலம் போடுவதற்காக காலையில் தினமும் வீட்டில் வெளியே வரும் அவர் நேற்று நீண்ட நேரம் வெளியே வரவில்லை. ஒரு கதவும் லேசாக திறந்து கிடந்தது.

அரைநிர்வாணம்
சந்தேகமடைந்த எதிர்வீட்டில் வசிக்கும் பெண் மற்றும் அக்கம்பக்கத்தினர் வீட்டில் வந்து பார்த்தனர். அப்போது சாந்தி கழுத்தறுக்கப்பட்டு, வயிற்றில் கத்திக்குத்து காயத்துடன், அரை நிர்வாண கோலத்தில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார்

பிரேத பரிசோதனை
இதனை கண்டு அச்சம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக விருதாச்சலம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். பின்பு சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரும் துணை காவல் கண்காணிப்பாளரும் விசாரணை நடத்தினர். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

எஸ்பி நேரில் விசாரணை
மோப்ப நாய் அர்ஜுன் கொண்டும் கைரேகை நிபுணர்கள் தடயங்கள் ஏதேனும் கிடைக்கின்றதா என்பதை பரிசோதித்து சேகரித்தனர். பின்னர் சம்பவ இடத்தில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ விசாரணை மேற்கொண்டார். கொல்லப்பட்ட சாந்தி கடந்த 7 மாதங்களாகத்தான் அங்கு வசித்து வந்துள்ளார்.

அரை நிர்வாண கோலம்
சாந்தியின் சேலை, ஜாக்கெட் கிழிக்கப்பட்டு அரை நிர்வாண கோலத்தில் கிடந்ததால் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டாரா என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications