கடலூரில் கோமதி கண் இமைக்கும் நேரம் தான்.. அந்த நேரம் பார்த்தா வரணும்.. எமனாக வந்த லாரி
கடலூர்: கடலூர் மாவட்டம் திட்டக்குடி மணல்மேடு பகுதியை சேர்ந்த கோமதி என்பவர் அங்குள்ள அரசு கலைக்கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவர் சைக்கிளில் வீடு திரும்பும் போது, திடீரென மாடுகள் சாலையில் மிரண்டு ஓடியது. அப்போது நிலை தடுமாறி மாணவி கோமதி கீழே விழுந்தார். திடீரென அந்த நேரம் பார்த்து டிப்பர் லாரி ஒன்று வந்துகொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக யாருமே எதிர்பார்க்காத சம்பவம் நடந்தது.
சாலைகளில் பயணிக்கும் போது, மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் நாம் என்னதான் சரியாக சென்றாலும் எதிரே வருபவரும் பொறுப்புடன் வர வேண்டும். அவர் சரியாக கவனிக்காமல் வந்தால் விபத்து ஏற்படும். நமக்கு பெரும் ஆபத்து ஏற்படும் வாய்ப்பு மிக அதிகம். சாலைகளில் இருசக்கர வாகனங்களில் செல்வோர், நடந்து செல்வோரே விபத்தில் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

சாலையை கடக்கும் போது, சாலையில் பெரிய வாகனங்களை முந்தி செல்லும் போது, சாலைகளில் வாகனங்களில் அதிவேகமாக செல்லும் போதும், சாலைகளில் பெரிய வாகனங்கள் கட்டுப்பாட்டை இழக்கும் போது, நடந்து செல்வோரும், இருசக்கர வாகனத்தில் செல்வோரும் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அதேபோல் சாலைகளில் மாடுகள் மற்றும் நாய்களாலும் விபத்துகள் அவ்வப்போது ஏற்படுகின்ன. அந்த வகையில் கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் மாடு ஒன்று சாலையில் மிரண்டு ஓடியதால் விபத்தில் சிக்கி கல்லூரி மாணவி உயிரிழந்தார்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி மணல்மேடு பகுதியை சேர்ந்தவர் சங்கர் என்பவருக்கு 4 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இதில் 4-வது மகளான கோமதி (வயது 18) என்பவர் திட்டக்குடி அரசு கலை கல்லூயிரில் பி.எஸ்சி. முதலாம் ஆண்டு படித்து வந்தாா். இவர் நேற்று கடைக்கு சென்று பால் வாங்கிவிட்டு சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். திட்டக்குடி-தொழுதூர் சாலையில் கிருஷ்ணா தியேட்டர் அருகில் வந்து கொண்டிருந்தார். அப்போது, சாலையோரத்தில் மாட்டுவண்டியில் கட்டியிருந்த மாடுகள் திடீரென மிரண்டு ஓடியது. இதனால் அச்சமடைந்த கோமதி சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி சாலையில் விழுந்தார்.
அப்போது அந்த வழியாக டிப்பர் லாரியின் முன்பக்க சக்கரம் கோமதியின் மீது ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திட்டக்குடி போலீசார் கோமதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தை அடுத்து டிப்பர் லாரியை ஓட்டி வந்த பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் கிராமத்தை சேர்ந்த சதீஷ் (37) என்பவர் மீது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். லாரி சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications