கடலூரில் காதல் திருமணம் செய்த மருத்துவ கல்லூரி மாணவி.. மகளை அப்பா இப்படியா பார்க்கனும்!

Subscribe to Oneindia Tamil

கடலூர்: கடலூர் அடுத்த ரெட்டிச்சாவடி அருகே உள்ள பெரிய காட்டுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த ஷீலா என்ற இளம் பெண், புதுச்சேரியில் உள்ள மருத்துவக்கல்லூரியில் பிசியோதெரபி படித்து வந்தார். இவர் படித்துக்கொண்டிருக்கும் போதே, அதே ஊரைச்சேர்ந்த இளைஞரை காதலித்து வந்தார். கடந்த ஓராண்டிற்கு முன்பு காதல் திருமணம் செய்த ஷீலா, வீட்டில் இருந்த காட்சியை கண்டு அவரது பெற்றோர் ஆடிப்போனார்கள். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

கடலூர் அடுத்த ரெட்டிச்சாவடி அருகே பெரிய காட்டுப்பாளையம் என்ற கிராமம் இருக்கிறது. இந்த கிராமத்தை சேர்ந்த சிவக்குமார் என்பவருடைய மகள் ஷீலா. இவருக்கு 20 வயது ஆகிறது. புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவ கல்லூரியில் பிசியோதெரபி 3-ம் ஆண்டு படித்து வந்துள்ளார். ஷீலா, தன்னுடைய ஊரை சேர்ந்த கூலி தொழிலாளியான முகேஷ் என்பரை காதலித்து வந்துள்ளார். கடந்த ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டு தனியாக அதே ஊரில் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

cuddalore marriage love

இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் ஷீலா மனஉளைச்சலில் இருந்தாராம். இந்த சூழலில் ஷீலா நேற்று காலை தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதுபற்றி ரெட்டிச்சாவடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஷீலாவின் உடலை கைப்பற்றினார்கள். தொடர்ந்து உடலை பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே தனது மகள் ஷீலாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சிவக்குமார் ரெட்டிச்சாவடி போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரில், எனது மகள் ஷீலா, முகேஷ் என்பவரை கடந்த ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த 4 மாதத்திற்கு முன்பு ஷீலாவை முகேஷ் சந்தேகப்பட்டு வந்தார். இதனால் அடிக்கடி அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த ஷீலா தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். மேலும் எனது மகள் சாவில் தனக்கு சந்தேகம் உள்ளது என்று மனுவில் கூறியுள்ளார்.

அதன்பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஷீலாவுக்கு திருமணமாகி ஒரு ஆண்டே ஆவதால் கடலூர் கோட்டாட்சியரும் விசாரணை நடத்தி வருகிறார். காதல் திருமணம் செய்த மருத்துவ கல்லூரி மாணவி ஓராண்டில் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)

மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+