சிதம்பரம் அரசு மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பெண்ணுக்கு இப்படியா ஆகணும்

Subscribe to Oneindia Tamil

கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் கோதண்டராமபுரம் வெள்ளச்சிகுப்பம் கிராமத்தை சேர்ந்த விமலா என்பவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார். ஆனால் துரதிஷ்டவசமாக அவர் இன்று உயிருடன் இல்லை.. அலட்சியமாக செயல்பட்ட டாக்டர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் மறியல் போராட்டம் நடத்தினார்கள்.. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் கோதண்டராமபுரம் வெள்ளச்சிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் செல்லதுரை. இவரது மனைவி விமலாவுக்கு 31 வயது ஆகிறது. இவர்களுக்கு பிரித்திகா (11), மகிழினி (1) என்ற 2 பெண் குழந்தைகளும், மகிழன் (3) என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். 3 குழந்தைகள் பிறந்ததால், விமலா குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்காக கடந்த பிப்ரவரி மாதம் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவருக்கு டாக்டர்கள் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்தனர்.

What happened to the woman who underwent family planning surgery at Chidambaram Government Hospital

பின்னர் விமலா சிதம்பரம் அருகே வடக்கு தில்லைநாயகபுரத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் அறுவை சிகிச்சை செய்த இடத்தில் தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறி மீண்டும் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அவர் சென்றார். அங்கு 20 நாட்கள் தங்கி சிகிச்சை பெற்று அவர் வீடு திரும்பினார்.

இந்த நிலையில் அறுவை சிகிச்சை செய்த இடத்தில் இரண்டு தையல் விட்டு விட்டதால் ரத்தம் வெளியேறி வருவதாக கூறி கடந்த மார்ச் 16-ந் தேதி மீண்டும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக விமலா சென்றார்.

அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் அவரது உடல் நிலை மேலும் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 20-ந் தேதி அனுமதிக்கப்பட்டார்.

அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று விமலா பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் சிதம்பரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் விமலாவின் உறவினர்கள் நேற்று சிதம்பரம் அரசு மருத்துவமனை முன்பு ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் மருத்துவமனை முன்பு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் தாசில்தார் ஹரிதாஸ், டிஎஸ்பி பிரதீப், இன்ஸ்பெக்டர் சிவானந்தம் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், விமலாவுக்கு சரியான முறையில் சிதம்பரம் அரசு மருத்துவமனை டாக்டர்கள் சிகிச்சை அளிக்கவில்லை. இதனால் ஏற்பட்ட பாதிப்பால்தான் விமலா இறந்துள்ளார். எனவே பணியில் அலட்சியமாக செயல்பட்ட டாக்டர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

அதற்கு போலீசார், விமலாவின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படும் பின்னர் அறிக்கை வந்ததும் அதனடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதையடுத்து விமலாவின் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+