மேடையில் ஹெச்.ராஜா பேசும் போது.. திடீரென நுழைந்து சரமாரியாக திட்டிய விசிக பெண் நிர்வாகி.. பரபரப்பு
மேடையில் ஹெச்.ராஜா பேசும் போது திடீரென நுழைந்து சரமாரியாக திட்டிய விசிக பெண் நிர்வாகியால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர்: மேடையில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா பேசும் போது திடீரென நுழைந்து கோஷமிட்ட விசிக பெண் நிர்வாகியால் பாஜக கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம் புவனகிரியில் பாஜகவின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் திங்கள்கிழமை நடந்தது. இந்த கூட்டத்தில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா கலந்து கொண்டார்.
பாஜக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் அமர்ந்திருந்த அந்தக் கூட்டத்தில் ஹெச் ராஜா பேசிக்கொண்டிருந்தார். அப்போது ஹெச் ராஜாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து விசிகவைச் சேர்ந்த பெண் நிர்வாகி ஒருவர் திடீரென கோஷமிட்டார். இதனால் பாஜக கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

பெண் ஆவேசம்
இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த பெண்ணை அப்புறப்படுத்தினர். அப்போது அந்த பெண், திருமாவளவன் குறித்து ஹெச் ராஜா எதற்காக பேசுகிறார். அவர் அப்படி பேசக்கூடாது என்று ஆவேசமாக பேசினார். அந்த பெண்ணை சமாதானம் செய்த போலீசார் அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

ஹெச் ராஜா விமர்சனம்
கடலூர் மாவட்டம் புவனகிரியில் ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம் பேசுகையில், "விடுதலை சிறுத்தைகள் கட்சி, மாநில கட்சி கூட இல்லை. அது மாவட்ட கட்சி. ஊர் குருவி எவ்வளவு தான் பறந்தாலும் அது பருந்தாக முடியாது. பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக விஷம் கக்குவதற்கு காரணம் என்ன?

ஹெச் ராஜா கேள்வி
இன்று அலைஅலையாக பட்டியல் சமுதாய மக்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். திருமாவளவனை எச்சரிக்க விரும்புகிறேன். 24 மணிநேரத்தில் நீங்களே சொன்னபடி எம்பி ராஜினாமா பண்ணணும். வாங்க பைட் பண்ணி பார்ப்போம்.. எம்பி பதவியை ராஜினாமா செய்து விட்டு விவாதம் நடத்த திருமாவளவன் தயாரா?" இவ்வாறு ஹெச் ராஜா பேசினார்.

பாஜக மீது தாக்கு
நேற்று சென்னை சைதாப்பேட்டையில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது பாஜக குறித்து கடுமையாக விமர்சித்து பேசினார். பாஜக ஒரு மதம் சார்ந்து இயங்குவதாகவும், சாதிகள் அனைத்தும் தனித்தனியாக பிரிந்து இருக்க வேண்டும் என்பதே அவர்கள் குறிக்கோள் என்றும், மத ரீதியாக அரசை அமைப்பதே அவர்களின் இலக்கு என்றும் பேசினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications