கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: வாட்ஸ் ஆப்பில் பிளான்.. கலவரம் வெடித்தது எப்படி? உளவுத்துறை ரிப்போர்ட்
கடலூர்: கள்ளக்குறிச்சி போராட்டம் நடைபெற்றது எப்படி, இது கலவரமாக வெடித்தது என்று உளவுத்துறை ரிப்போர்ட் வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Recommended Video
கள்ளக்குறிச்சியில் கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவி பலியான சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கி உள்ளது. அங்கு ஏற்கனவே மாணவிகள் பலர் கொடுமைப்படுத்தப்பட்டதாகவும் புகார் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் மாணவிக்கு நீதி வேண்டி பள்ளி வளாகம் முன் இன்று மக்கள் போராட்டம் செய்தனர்.
மாடியில் இருந்து விழுந்து அந்த மாணவி மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது. அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகிகள் தெரிவித்துள்ள நிலையில், இது கொலை என்று மாணவியின் பெற்றோர் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

போராட்டம்
இந்த நிலையில் போராட்டம் நடத்தப்பட்டது எப்படி என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி முதலில் ஜஸ்டிஸ் பார் என்று அந்த மாணவியின் பெயரை வைத்து டிரெண்ட் செய்யப்பட்டு இருக்கிறது. ட்விட்டரில் இதற்காக டிரெண்ட் செய்யப்பட்டுள்ளது. அப்போதே போராட்டங்கள் பெரிய அளவில் நடக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் எதிர்பார்த்ததை விட மிக பெரிய அளவில் இன்று போராட்டங்கள் நடைபெற்றன. 400 பேர் வரை போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

டிரெண்ட்
பள்ளியை மொத்தமாக மூட வேண்டும் என்று கூறி போராட்டம் செய்தனர். இந்த போராட்டம் இன்று கலவரத்தில் முடிந்த நிலையில் பள்ளி பேருந்துகளுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். தீயை அணைக்க வந்த தீயணைப்பு வாகனங்களும் துரத்தியடிக்கப்பட்டன. பள்ளி மாணவி மரணத்துக்கு காரணமானோரை தண்டிக்ககோரி ஆயிரக்கணக்கான மக்கள் களமிறங்கி போராட்டம் செய்து வருகிறார்கள்.

கலவரம்
தாளாளரை கைது செய்ய வேண்டும். உடனே இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து மக்கள் போராட்டம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில், வன்முறையில் ஈடுபட்டோரை விரட்ட வானத்தை நோக்கி போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த போராட்டத்தில் சில போலீசார் மீது தாக்குதலும் நடத்தப்பட்டது.

வாட்ஸ் ஆப்
இந்த நிலையில் இந்த போராட்டம் வாட்ஸ் ஆப் மூலம் திட்டமிடப்பட்டதாக கூறப்படுகிறது. உளவுத்துறை போலீசார் நடத்திய விசாரணையில் இந்த தகவல்கள் தெரிய வந்துள்ளன. மொத்தம் 500 பேர் பல்வேறு வாட்ஸ் ஆப் குழுக்களை தொடங்கி அதில் போராட்டம் செய்துள்ளனர். வாட்ஸ் ஆப் குழுக்கள் தொடங்கப்பட்ட சில மணி நேரத்தில் போராட்டங்களை செய்ய முடிவு செய்துள்ளனர். மாணவ அமைப்புகள் சாதாரணமாக போராட்டம் செய்ய வாட்ஸ் ஆப்பில் திட்டமிட்டுள்ளனர்.

உளவுத்துறை
ஆனால் மக்களின் கோபம் காரணமாக போராட்டம் கையை மீறி சென்று இருக்கலாம் என்று உளவுத்துறை அறிக்கை தெரிவித்துள்ளது. அதிலும் போராட்டத்தில் இன்று டிஐஜி பாண்டியன் உட்பட பலரும் காயம் அடைந்தனர். இதற்கு பின் மக்கள் கோபம் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தற்போது சட்ட ஒழுங்கு ஏடிஜிபி தாமரை கண்ணன் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார். மேற்கு மண்டல ஐஜி தேன்மொழியும் அங்கு சென்றுள்ளார்.

கோபம்
தற்போது இந்த வாட்ஸ் ஆப் குழுக்கள் குறித்த விசாரணை நடந்து வருகிறது., குழுக்களை தொடங்கியது யார், அட்மின் யார் என்று விசாரணை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் போராட்டத்தின் போது கல்லெறிந்தவர்களின் முகங்களை வீடியோக்களை வைத்து அடையாளம் கண்டு கைது செய்யவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். இது தொடர்பாக விசாரணை தற்போது நடந்து வருகிறது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications