Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ஏங்க, நம்ம குழந்தை".. மகாலட்சுமி சொன்னதுமே, 9வது கணவனுக்கு தலையே சுத்திடுச்சு.. இதுல 10வதா ஒருத்தர்

நகை, பணத்துடன் மாயமான பண்ருட்டி மகாலட்சுமியை போலீசார் வலைவீசி தேடி கொண்டிருக்கிறார்கள்

Subscribe to Oneindia Tamil

கடலூர்: இளைஞரிடம் அனுதாபம் வரக்கூடிய வகையில் பேசி, விவசாயியிடம் நெருங்கி பழகி, காதல் வலையில் வீழ்த்தி, திருமணமும் செய்துள்ளார் மகாலட்சுமி.. இப்போது இவர் எங்கே இருக்கிறார் என்றே தெரியாமல் போலீசார் தேடி கொண்டிருக்கிறார்கள்.. இதனிடையே மகாலட்சுமி குறித்த பல திடுக் தகவல்கள் இணையத்தில் வெளிவந்தவண்ணம் உள்ளன.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே வானியம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அருள்ராஜ்.. 25 வயதாகிறது.. கரும்பு வெட்டும் கூலிதொழிலாளி இவர்.

வேலை நேரம் போக, ஃபேஸ்புக்கை பயன்படுத்தி வந்தார் அருள்ராஜ்.. நண்பர்கள் ஏராளமானவர்களுடனும் ஃபேஸ்புக்கில் தொடர்பில் இருந்து வந்தார். அப்போது அருள்ராஜுக்கு, வேலூரை சேர்ந்த மகாலாட்சுமி என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டது..

சங்கீதா

சங்கீதா

தான் ஒரு ஆதரவற்றவர் என்று தன் துயரத்தை சொல்லவும், இதைக்கேட்டு அருள்ராஜ் உருகி உள்ளார்.. இருவருக்கும் காதல் ஆரம்பமானது.. இதையடுத்து, அருள்ராஜ் அந்த பெண்ணை கடந்த ஆண்டு பண்ருட்டியில், ஒரு கோயிலில் வைத்து, தன்னுடைய அம்மாவின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். அருள்ராஜ் கரும்பு வெட்டும் தொழிலுக்காக வெளியூர்களுக்கு செல்வாராம்.. அதனால், வெளியூர்களிலேயே நிறைய நாள் தங்கியிருப்பது வழக்கமாம்.. அருள்ராஜ் ஊரில் இல்லாத நேரங்களில், தன்னுடைய சொந்தக்காரர்களை பார்க்க செல்வதாக சொல்லி மகாலட்சுமி கிளம்பி போவாராம்.. இப்படியே நிறைய நாள் சென்றுள்ளார்..

 டுபாக்கூர் அட்ரஸ்

டுபாக்கூர் அட்ரஸ்

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அருள்ராஜ், தன்னுடைய தங்கை திருமணத்துக்காக 7 பவுன் நகை, 1 லட்சம் ரூபாய் பணத்தை வீட்டில் வைத்திருந்தார்.. இந்த நகை, பணத்துடன் மகாலட்சுமி திடீரென மாயமானார். நீண்ட நாட்களாகியும் அவர் வீடு திரும்பவில்லை.. இதனால், அதிர்ச்சியடைந்த அருள்ராஜ் அவரை பல இடங்களில் தேடினார். மகாலட்சுமி கிடைக்கவில்லை.. இறுதியில் மொத்தமாக ஏமாந்து போன அருள்ராஜ், இதுகுறித்து பண்ருட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரணையையும் துவங்கினர்..

 மெசெஞ்ஜர்

மெசெஞ்ஜர்

அப்போதுதான், விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் கிடைத்தது. அருள்ராஜை திருமணம் செய்த மகாலட்சுமி ஏற்கனவே பலமுறை கல்யாணமானவராம்.. வேலூர், கோவை, திருவண்ணாமலை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த இளைஞர்களை, திருமணம் செய்துள்ளது தெரியவந்துள்ளது.. இப்போது மகாலட்சுமியை போலீசார் தேடி வரும்நிலையில், மகாலட்சுமி குறித்த மேலும் சில தகவல்கள் வெளிவந்து பரபரப்பை கூட்டி வருகின்றன.. ஃபேஸ்புக்கல் மெசெஞ்ஜரில்தான், முதன்முதலில் அருள்ராஜுடன் மகாலட்சுமி அறிமுகமானார்..

சீமந்தம்

சீமந்தம்

அவராகத்தான் வலிய வந்து தன்னை அறிமுகப்படுத்தி கொண்டுள்ளார்.. தன்மீது அனுதாபப்படும் வகையிலேயே பேசியிருக்கிறார்.. அடுத்த 10வது நாளே செல்போன் நம்பரை இருவருமே பகிர்ந்து கொண்டுள்ளனர்.. பிறகு காதலையும் மகாலட்சுமியே முதலில் சொல்லியுள்ளார்.. அடுத்து கல்யாணம் செய்து கொள்ளும்படியும் உடனே கேட்டுள்ளார்.. கல்யாணம் செய்ய வேண்டும் என்று மெல்ல மெல்ல நெருக்கடியும் தர ஆரம்பித்துள்ளர் மகாலட்சுமி. அதற்குபிறகுதான் வேறு வழியில்லாமல், தன்னுடைய அம்மாவிடம் விஷயத்தை சொல்லி, அவரை சம்மதிக்க வைத்தாராம்.

 சீர்வரிசை அபாரம்

சீர்வரிசை அபாரம்

4 மாதங்கள் இவர்கள் சந்தோஷமாக வாழ்ந்துள்ளனர்.. பிறகு, திடீரென ஒருநாள், தான் கர்ப்பமாக இருப்பதாக அருள்ராஜிடம் சொன்னாராம் மகாலட்சுமி.. அதனைக் கேட்டு குஷியில் துள்ளி குதித்துள்ளனர் அருள்ராஜும் அவரது குடும்பத்தினரும்.. 5வது மாதத்தில் சீர்வரிசை நடந்துள்ளது.. ஆதரவற்ற பெண் என்பதால், இப்படி சீர்வரிசை செய்தால், மகாலட்சுமி சந்தோஷப்படுவார் என்பதால், பிரம்மாண்டமாக சீர்வரிசையை நடத்தியுள்ளார் அருள்ராஜ்.

 சுருட்டிய பணம்

சுருட்டிய பணம்

இதற்கு பிறகு, தன்னுடன் பள்ளியில் படித்த தோழிக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டதால், சென்னைக்கு சென்று பார்த்து வருவதாக அருள்ராஜிடம் மகாலட்சுமி சொல்லியிருக்கிறார்.. அதற்கு அருள்ராஜ் சம்மதம் தெரிவிக்கவே, அப்போதுதான் வீட்டில் இருந்த நகை, பணத்தை சுருட்டிக் கொண்டு ஓடியுள்ளார்.. வீட்டுக்கு வந்து பார்த்த அருள்ராஜ் மனைவியை காணாமல் பல இடங்களில் தேடியுள்ளார். அப்போதுதான், ஒரு காரில் மகாலட்சுமி ஏறி சென்றததை பார்த்ததாக, ஊர் மக்கள் அருள்ராஜிடம் சொல்லி உள்ளனர்.

 தோழி யார்

தோழி யார்

அதன்பிறகு பலமுறை, மகாலட்சுமியின் செல்போன் நம்பருக்கு போன் போட்டும், மகாலட்சுமி பதிலளிக்கவில்லை.. பிறகு, ஒருநாள் திடீரென அருள்ராஜுக்கு போனை போட்டு பேசினாராம் மகாலட்சுமி.. தனக்கு குழந்தை பிறந்து விட்டது என்று சொல்லி, குழந்தையின் போட்டோ ஒன்றையும் வாட்ஸ்அப்புக்கு அனுப்பி வைத்துள்ளார்.. இதை பார்த்து இன்ப அதிர்ச்சி ஆன அருள்ராஜ் குழந்தையை பார்க்க கிளம்பி வருவதாக சொன்னார்.. ஆனால், கொஞ்ச நேரத்தில், அந்த குழந்தை இறந்துவிட்டதாகவும் சொல்லி ஷாக் தந்துள்ளார் மகாலட்சுமி.. இதையும் அருள்ராஜ் நம்பிக் கொண்டிருந்துள்ளார்.. அதற்கு பிறகு, மகாலட்சுமி ஏன் போனிலேயே பேசி கொண்டிருக்க வேண்டும்? என்று சந்தேகப்பட்டுதான், அவர் ஏற்கனவே தந்த அட்ரஸை தேடி போனார்.

 டுபாக்கூர் அட்ரஸ்

டுபாக்கூர் அட்ரஸ்

அங்கு சென்று விசாரித்தபோது, அது அட்ரஸ் போலியானது என்று தெரியவந்தபோது அதிர்ந்தார்.. பிறகு, ஒவ்வொரு விஷயமாக மனைவி குறித்து விசாரித்தபோது, மகாலட்சுமியின் லிஸ்ட்டில் இருந்த 9வது புருஷன் தான் என்பது தெரியவரவும் அருள்ராஜுக்கு தலையே சுற்றிவிட்டது.. அதுமட்டுமல்ல, 10வதாக, ஒருவரை மகாலட்சுமி திருமணம் செய்து வாழ்ந்து வருவதும் அருள்ராஜூக்கு தெரிய வந்துள்ளது.. பண்ருட்டி மகளிர் ஸ்டேஷனில் புகாரை தந்துள்ள நிலையில், இடிந்து போய் உட்கார்ந்துள்ளார் அருள்ராஜ்..!!

ஐஸ் வார்த்தை

ஐஸ் வார்த்தை

மகாலட்சுமியின் முழு நேர வேலையே ஃபேஸ்புக் மூலம் கல்யாணம் ஆகாத ஆண்களிடம் பழகி அவர்களை காதலிக்கிறேன் என்ற முதலில் ஆசை வார்த்தை சொல்வாராம்.. அதற்கு அவர்கள் இணங்கவில்லை என்றால், உடனே "அனாதை" என்ற அடுத்த ஆப்ஷனை பயன்படுத்துவாராம்.. இதற்கு பிறகு காதல் வலையில் விழவைத்து கல்யாணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன் என்று சொல்லி, பிடிவாதம் பிடிக்க ஆரம்பிப்பாராம்.. அதன்பிறகுதான் அவரின் சுயரூபம் தெரியவரும் என்கிறார்கள்.. சில இடங்களில், தனக்கு கல்யாணமான முதல் நாளே, தனக்கு அவசர வேலை இருப்பதாகக் சொல்லிவிட்டு, யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் நகை, பணம் உள்ளிட்டவற்றை அபேஸ் செய்து கொண்டு கிளம்பிவிடுவாராம். தப்பித்து செல்வதற்கான சூழல் அமைந்தால், அப்போதே கிளம்பிவிடுவாராம்.

நிழலும் நிஜமும்

நிழலும் நிஜமும்

அருள்ராஜின் தங்கையின், திருமணத்துக்கு நகை, பணம் வரவேண்டி இருந்தால்தான், 4 மாத காலம், மகாலட்சுமிக்கு அங்கேயே தங்க வேண்டியதாயிற்று என்கிறார்கள்.. கடந்த 2 நாட்களுக்கு முன்புதான், விழுப்புரம் மேல்மலையனூர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளைஞரை, தன்னுடைய பாணியிலேயே திருமணம் செய்து நகை பணத்தை அபேஸ் செய்து சென்றது தொடர்பாக மீடியாக்களில் செய்தி வெளியானது.. இனி, மகாலட்சுமியை போலீசார் கைது செய்து விசாரிக்கும்போதுதான், மகாலட்சுமியிடம் நிஜமாகவே எத்தனை பேர் ஏமாந்து இருக்கிறார்கள் என்பது தெரியவரும் என்கிறார்கள்.. இந்த சம்பவத்தில் மகாலட்சுமி மட்டும் ஈடுபட்டுள்ளாரா அல்லது இவர்கள் ஒரு குழுவாக செயல்படுகின்றனரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+