"யூ டர்ன்".. கள்ளக்குறிச்சி மாணவி உடலை கொண்டு சென்ற போது ஏற்பட்ட குழப்பம்.. கான்வாய் நின்றது ஏன்?
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாணவியின் உடலை சுமந்து வந்த ஆம்புலன்ஸ் இன்று காலை திடீரென வழி மாறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Recommended Video
கள்ளக்குறிச்சியில் பலியான மாணவியின் உடல் இன்று அவரின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. கடந்த 10 நாட்களாக மாணவியின் உடலை வாங்க பெற்றோர்கள் மறுத்த நிலையில், நேற்று உயர் நீதிமன்ற உத்தரவை ஏற்று பெற்றோர்கள் உடலை பெற்றுக்கொள்ள சம்மத்தித்தார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை மாணவியின் உடல் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு முறை பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அஞ்சலி
மாணவியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த சொந்த ஊரில் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. சொந்த ஊரான பெரிய நெசலூர் கிராமத்தில் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது. நேற்று வரை உடலை எரிக்க திட்டமிடப்பட்டு இருந்த நிலையில் இன்று அடக்கம் செய்வது என்று முடிவு எடுக்கப்பட்டது. பெரிய நெசலூர் கிராமத்தில் இறுதி சடங்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதற்காக அங்கு கடுமையான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு
பெரிய நெசலூர் கிராமத்தில் கிராமத்தில் 4 அடுக்கு சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. சாலைகள் அனைத்தும் மூடப்பட்டு வெளியூர் ஆட்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. சொந்த ஊர் மக்கள் மட்டுமே இறுதிச்சடங்கில் பங்கேற்க காவல்துறை உத்தரவு போட்டுள்ளது. மாணவியின் உடல் தற்போது அந்த கிராமத்தை நோக்கி கொண்டு செல்லப்பட்டு கொண்டு இருக்கிறது,

உடல் அடக்கம்
இந்த நிலையில் மாணவியின் உடலை ஆம்புலன்சில் கொண்டு வந்த போது, அதன் பின்னால் இன்னொரு காரில் அவரின் பெற்றோர்கள் வந்தனர். முன்னாள் சென்ற காரில் தமிழ்நாடு அமைச்சர் கணேசன் வந்தார். மிகுந்த போலீஸ் பாதுகாப்போடு கான்வாய் போடப்பட்டு அந்த ஆம்புலன்ஸ் கொண்டு வரப்பட்டது. ஆம்புலன்ஸை எங்கும் நிறுத்த கூடாது என்று திட்டமிட்டு வேகமாக அதை கொண்டு சென்றனர். இருந்தாலும் பாலம் ஒன்றுக்கு அருகில் வந்த போது ஆம்புலன்ஸ் திடீரென நின்றது.

ஆம்புலன்ஸ்
திடீரென ஆம்புலன்ஸ் நின்று ரிவர்ஸ் எடுத்து பின்னர் யூ டர்ன் போட்டது. இதனால் அங்கு பெரிய குழப்பம் ஏற்பட்டது. ஏன் ஆம்புலன்ஸ் யூ டர்ன் போட்டது என்ற குழப்பம் நிலவியது. ஊத்துக்குடி வழியாக வேப்பூர் செல்லும் சாலையில் செல்லாமல் அந்த ஆம்புலன்ஸ் மேம்பாலம் மீதி ஏறி உளுந்தூர் பேட்டை சாலையை நோக்கி சென்றுள்ளது. இதனால் வழி தெரியாமல் டிரைவர் குழம்பி உள்ளார்.

குழப்பம்
பாலத்தின் மீது ஏறியதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அங்கு இருந்த ஒருவர் வழி மாறிவிட்டோம் என்று கூறியதும் உடனே வண்டியை திருப்பி யூ டர்ன் போட்டுள்ளனர். இதையடுத்து வழியை மாற்றி, வண்டியை ஊத்துக்குடி ரூட்டில் திருப்பி கொண்டு வந்துள்ளனர். இதையடுத்து அந்த மாணவியின் உடலை சுமந்து சென்ற ஆம்புலன்ஸ் பெரிய நெசலூர் நோக்கி சென்றது.

குழப்பம் ஏற்பட்டது
இதனால் அங்கு சில நிமிடங்கள் குழப்பம் ஏற்பட்டது. அந்த மாணவியின் உடலை முதலில் எரிக்க ஏற்பாடுகள் செய்து இருந்தனர். ஆனால் மாணவியின் பெற்றோருக்கு இன்னும் பிரேத பரிசோதனை முடிவில் திருப்தி இல்லை. பிரேத பரிசோதனையில் முடிவில் சிக்கல் இருந்தால், மீண்டும் பரிசோதனை செய்யும் வசதியாக உடலை புதைக்க முடிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications