மாமா செத்து போன்னு சொல்றாரும்மா.. நான் எங்க போவேன்.. 2 குழந்தைகளுடன் தீக்குளித்து மாண்ட சிவகாமி!

2 குழந்தைகளுடன் தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்

Subscribe to Oneindia Tamil

கடலூர்: "மாமா என்னை செத்து போன்னு சொல்றாரும்மா.. என்னை பிடிக்கலேன்னு சொல்றாரு.. மாமா இல்லாம என்னால இருக்க முடியாது" என்று தன் அம்மாவிடம் சொல்லி அழுத சிவகாமி, 2 குழந்தைகளுடன் தீ வைத்து கொளுத்தி கொண்டு உயிரை விட்டுவிட்டார்.

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பகுதியை சேர்ந்த தம்பதி விஸ்வநாதன் - சிவகாமி. இவர்களுக்கு கல்யாணம் ஆகி 5 வருடங்கள் ஆகிறது. தன்யாஸ்ரீ என்ற 4 வயது மகளும், தமிழ் அமுதன் என்ற ஒன்றரை வயது மகனும் உள்ளனர்.

விஸ்வநாதன் சிங்கப்பூரில் வேலை பார்க்கிறார்.. சிவகாமி தனது 2 குழந்தைகளுடன் தனியாக ஒரு வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் பகலில் சிவகாமி வீட்டு பெட்ரூம் ஜன்னல்கள் வெடித்து சிதறின.. வீட்டிற்குள் இருந்து புகையும் வெளியேறி வந்தது.

குழந்தைகள்

குழந்தைகள்

இதை பார்த்து அதிர்ந்த அக்கம்பக்கத்தினர் சிவகாமி வீட்டுக்குள் ஓடினார்கள். அப்போது, படுக்கையில், சிவகாமியும், 2 குழந்தைகளும் தீயில் எரிந்து கொண்டிருந்தனர்.. வலி தாங்க முடியாமல் அலறி கத்தினர். இதை பார்த்த பதறிய அக்கம்பக்கத்தினர், அவர்களை மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரியிலும், மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியிலும் சேர்த்தனர்.. ஆனால், 3 பேருமே இறந்துவிட்டனர். தகவலறிந்து போலீசார் விசாரணையை ஆரம்பித்தனர்.

தற்கொலை

தற்கொலை

சிவகாமி வீட்டு பெட்ரூமில் மண்எண்ணெய் வாடை வந்துள்ளது.. அதனால் சிவகாமிதான் குழந்தைகள் மீதும், தன் மீதும் மண்எண்ணெய் ஊற்றி எரித்து கொன்றிருக்கலாம் என சந்தேகித்தனர். முதல்கட்ட விசாரணையில் இது ஒரு கள்ள உறவு தொடர்பான தற்கொலை என தெரியவந்துள்ளது.

சிவகாமி

சிவகாமி

விஸ்வநாதனுக்கு, சிவகாமியின் அண்ணி உதயாவுடன் கள்ள தொடர்பு இருந்துள்ளது.. இதை அறிந்த சிவகாமி கணவனை கண்டித்துள்ளார்.. இதுதான் இவர்களுக்கு பிரச்சனையாக வெடித்துள்ளது.. சிங்கப்பூரில் இருந்த கணவன் சிவகாமிக்கு போன் செய்து, "நீ செத்து போ.. உன்னை எனக்கு பிடிக்கல.. நான் வேற கல்யாணம் செய்து கொள்ள போறேன்" என்று கூறியுள்ளார்.

எங்க போவேன்

எங்க போவேன்

இதை சிவகாமி தன் அம்மாவிடம் போனில் சொல்லி அழுதுள்ளார்.. "மாமா என்னை செத்து போன்னு சொல்றாரும்மா.. என்னை பிடிக்கலேன்னு சொல்றாரு.. வீட்டை விட்டு போன்னு சொல்றாரு.. நான் எங்கம்மா போவேன்... மாமா இல்லாம என்னால இருக்க முடியாது" என்று சொல்லி அழவும், மகளை அவர் சமாதானம் செய்துள்ளார்.

விசாரணை

விசாரணை

இதற்கு பிறகும் சிவகாமிக்கு விஸ்வநாதன் போன் செய்து தொடர்ந்து "செத்து போ.. செத்து போ" என்று சொல்லவும்தான் இப்படி ஒரு முடிவை அவர் எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. எனினும் இதில் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+