லாட்ஜுக்கு கூப்பிட்டார்.. வற்புறுத்தி.. வீடியோ எடுத்தார்.. மிரட்டுகிறார்.. போலீஸிடம் வந்த அம்சவள்ளி!
அஇஅதிமுக பிரமுகர் மீது இளம்பெண் பாலியல் புகார் அளித்துள்ளார்
கடலூர்: "லாட்ஜுக்கு கூப்பிட்டார்.. வற்புறுத்தி உறவு கொண்டார்.. அதை வீடியோ எடுத்தார்.. பிற கட்சிக்காரர்களுடனும் உறவு கொள்ளும்படி என்னை மிரட்டுகிறார்" என்று அம்சவள்ளி என்ற பெண் அதிமுக பிரமுகர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை போலீசில் தெரிவித்துள்ளார்.
கடலூர் முதுநகர் சாலக்கரையை சேர்ந்தவர் அம்சவள்ளி.. 35 வயதாகிறது.. இவர் மாவட்ட எஸ்பி ஆபீசில் ஒரு புகார் மனு தந்துள்ளார். அந்த மனுவில் உள்ள சுருக்கம் இதுதான்:
"என் கணவர் பெயர் சரவணன்.. சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார்.. என் உறவினர் வினோத்ராஜ் என்பவர் முன்னாள் அதிமுக கவுன்சிலராக உள்ளார்.. இவர் என்னிடம் பேசி வந்த நிலையில், திடீரென ஆசை வார்த்தைகள் கூறி பலமுறை என்னை பாலியல் ரீதியாக பயன்படுத்தி கொண்டார். என்னை நிர்வாணமாக்கி செல்போனில் படம் பிடித்தார்.

பலாத்காரம்
கடலூரில் உள்ள ஒரு லாட்ஜிக்கும் அழைத்து வற்புறுத்தி பலாத்காரம் செய்தார்.. அதனையும் செல்போனிலும் வீடியோ எடுத்து கொண்டார்.. அந்த வீடியோவை காட்டி, கூப்பிடும் நேரம் எல்லாம் வரவேண்டும் என்று கூறி, பாலியல் ரீதியாக பயன்டுத்தினார்.

1 கோடி ரூபாய்
நாளடைவில் தனது தொழில் நஷ்டம் அடைந்துவிட்டது. அதை சரிசெய்வதற்கு சிங்கப்பூரில் இருந்து உன் கணவர் அனுப்பிய பணம், உனது நகை ஆகியவற்றை தரவேண்டும் என்று மிரட்டி சுமார் 1 கோடி ரூபாயை வாங்கி கொண்டார். போலீசுக்கு போனால் என் ஆபாச வீடியோக்களை சோஷியல் மீடியாவில் போட்டுவிடுவதாக மிரட்டுகிறார்.

மிரட்டல்
தனக்கு கவுன்சிலர் பதவி வேண்டும் என்பதற்காக கடலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய கட்சி பிரமுகருடன் பாலியல் ரீதியாக தொடர்பு கொள்ள என்னை மிரட்டுகிறார். நான் அதற்கு சம்மதிக்காததால் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி கடலூர் முதுநகர் காவல் நிலையத்தில் கடந்த மாதம் 13ம் தேதி என்னை மிரட்டி வெள்ளைதாளில் கையொப்பம் பெற்றுக்கொண்டனர்.

விசாரணை
என் உறவினர்களிடம் சொல்லியும் இதற்கு தீர்வு இல்லை. இப்போது என்னையும் எனது குழந்தைகளையும் கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார்.. இது சம்பந்தமான உரிய விசாரணை வேண்டும்..என் ஆபாச படங்களை அழிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications