ஓவர் லவ் டார்ச்சர்.. கல்யாணமாகியும் விடலை.. பேச மறுத்த சலோமி.. தீ வைத்து எரித்த கண்டக்டர்!
பெண்ணை பஸ் கண்டக்டர் பெட்ரோல் ஊற்றி கொளுத்தி உள்ளார்
கடலூர்: ஓவர் லவ் டார்ச்சர்.. கல்யாணமாகியும் விடல.. பேச மறுத்த சலோமியை பஸ்சில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்திவிட்டார் கண்டக்டர்!
நெய்வேலியைச் சேர்ந்தவர் சலோமி.. இவரது கணவர் ஜான்விக்டர்.. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்... சலோமி வடலூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.
வீடு நெய்வேலியில் உள்ளதால், அங்கிருந்து தனியார் பஸ்ஸில் ஏறி, வடலூரில் இருக்கும் ஆபீசுக்கு சென்று வருவார்.. அப்படி பஸ்ஸில் செல்லும்போது, அந்த தனியார் பஸ் கண்டக்டருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. கண்டக்டர் பெயர் சுந்தரமூர்த்தி.

கண்டக்டர்
இந்த பஸ்ஸில்தான் ஏறினால்தான், ஆபீஸ் டைமுக்கு சலோமியால் செல்ல முடியும் என்பதால், இதில்தான் தினந்தோறும் பயணம் செய்துள்ளார். கண்டக்டரும் - சலோமியும் நல்ல நட்பாகவும், நெருங்கி பழகி வந்துள்ளனர். சில நாட்களுக்கு முன்பு சலோமியிடம் சுந்தரமூர்த்தி தன் காதலை சொல்லி உள்ளார் போலும்.. ஆனால் கல்யாணமாகி, 2 குழந்தைகள் இருக்கிறது என்று சலோமி சொல்லியும், அவர் கேட்கவில்லை..

சலோமி
அதனால் சுந்தரமூர்த்தியிடம் பேசுவதை சலோமி தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதுதான் கண்டக்டருக்கு கோபத்தை தந்துவிட்டது. இந்நிலையில், இன்று காலை வழக்கம்போல் அதே பஸ்ஸில் ஏறி சலோமி ஆபீசுக்கு சென்றார்.. அங்கு தன் சீட்டில் உட்கார்ந்து வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது கண்டக்டர் சுந்தரமூர்த்தி திடீரென உள்ளே நுழைந்தார்.

பெட்ரோல் கேன்
அவரிடம் இன்றும் பேச முயன்றுள்ளார். அதை சலோமி கண்டுகொள்ளாமல் இருக்கவும், ஆத்திரத்தில் கையோடு கொண்டு சென்ற பெட்ரோல் கேனை திறந்து, சலோமி மீது ஊற்றி கொளுத்திவிட்டார். பட்டப்பகலிலேயே பெண்ணின் மீது பெட்ரோல் ஊற்றி எரித்ததை கண்டு அங்கிருந்தோர் உடம்பெல்லாம் தீப்பிடித்து சலோமி அலறினார்.. உடனடியாக அவரை மீட்ட அலுவலக ஊழியர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

சிகிச்சை
இப்போது சலோமி ஆபத்தான முறையில் சிகிச்சை பெற்று வருகிறார். 24 மணி நேரம் கெடு விதித்துள்ளார்களாம் டாக்டர்கள்!தீ வைத்து கொளுத்தியதும் கண்டக்டர் சுந்தரமூர்த்தி அங்கிருந்து தப்ப முயன்றுள்ளார்.. ஆனால் ஊழியர்களும் பொதுமக்களும், அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். சுந்தரமூர்த்தியை கைது செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சுந்தரமூர்த்தி காட்டுமன்னார்கோவிலை அடுத்த அரசூர் கிராமத்தை சேர்ந்தவராம்.

விசாரணை
ஆபீசில் வேலை பார்த்து கொண்டிருந்த பெண்ணை கண்டக்டர் உயிருடன் கொளுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை, அதிர்ச்சியை தந்து வருகிறது. சலோமியை எரித்து விட வேண்டும் என்பதற்காக முன்கூட்டியே கூல்டிரிங்ஸ் பாட்டிலில் சுந்தரமூர்த்தி பெட்ரோல் வாங்கி கொண்டு போனாராம்.. தொடர் விசாரணை நடந்து வருகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications