வளைகாப்புக்கு ஏற்பாடு செய்த கணவன்.. மின்கம்பியை மிதித்து சுருண்டு விழுந்து பலி.. கதறி அழுத கர்ப்பிணி
மின்கம்பியை மிதித்த நபர் சுருண்டு விழுந்து பலியானார்
கடலூர்: மனைவிக்கு வளைகாப்பு நடக்கவிருந்த நிலையில், வயல்வெளியில் கிடந்த மின்சார ஒயரை தெரியாமல் மிதித்துவிட்ட கணவன், அங்கேயே மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள உடையூர் கிராமத்தை சேர்ந்தவர் தமிழரசன்... இவருக்கு திருமணமாகி பிரியா என்ற மனைவி உள்ளார்..
பிரியா இப்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ளார்.. அதனால், பிரியாவிற்கு வளைகாப்பு நிகழ்ச்சியை தமிழரசன் ஏற்பாடு செய்திருந்தார்.. அதற்கான வேலைகளிலும் கடந்த சில தினங்களாகவே தடபுடலாக ஈடுபட்டு வந்தார்..

வளைகாப்பு
இந்நிலையில், மாலை நேரம் வளைகாப்பு நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த முடிவாகி இருந்தது.. அதற்குள் பகலில் வேலைக்கு சென்றுவிட்டு திரும்பிவிடலாம் என்று நினைத்து, காலை கிளம்பி சென்றுள்ளார்.. அப்போது அவர் வளர்க்கும் நாயும் அவருடன் கூடவே சென்றிருக்கிறது. வயல்வெளியை கடந்து சென்று கொண்டிருந்தபோது, ஓரமாக மின்கம்பி அறுந்து கிடந்ததை தமிழரசன் கவனிக்கவில்லை.. தெரியாமல் அதை மிதித்ததால் மின்சாரம் தாக்கி அங்கேயே தமிழரசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்...

கரண்ட் ஷாக்
அவருக்கு பின்னாடியே அந்த நாயும் கரண்ட் தாக்கி சுருண்டு விழுந்து இறந்தது.. அங்கிருந்தோர் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக குடும்பத்தினருக்கு தகவல் சொல்லி உள்ளனர்.. இதை கேட்டு தமிழரசன் குடும்பத்தினர் பதறி கொண்டு அங்கு விரைந்து வந்தனர்.. தமிழரசனின் சடலத்தை பார்த்து கர்ப்பிணி மனைவி கதறி அழுதது காண்போரை நிலைகுலைய வைத்தது... இது பற்றி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கு பதிவு
அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தமிழரசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்வதற்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்... அந்த பகுதியில் செல்லும் தாழ்வான மின்கம்பிகளை ஆய்வு செய்தனர்.

அலட்சியம்
மனைவிக்கு வளைகாப்பு நடத்தவிருந்த நிலையில், திடீரென காலையில் உயிரிழந்ததால் தமிழரசன் குடும்பமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது... மின்சாரத்துறை அதிகாரிகள் அலட்சியத்தால் இன்றைக்கு ஒரு உயிர் பலியாகியுள்ளது என்று கொந்தளித்துள்ளனர்.. மேலும், தாழ்வான மின் கம்பிகளை உடனடியாக சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications