Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வீட்ல கால் வச்சதுமே குடும்பத்தை பிரிச்சாங்க.. அதான் கொன்றேன்.. அண்ணி கொலையில் கொழுந்தன் வாக்குமூலம்

Subscribe to Oneindia Tamil

கடலூர்: திட்டக்குடி அருகே பெண் கொலை வழக்கில் குடும்பத்தை பிரித்ததால் கொலை செய்தேன் என அந்த பெண்ணின் கொழுந்தன் போலீஸில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்த ராமநத்தம் அருகே உள்ள கல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவருக்கு முருகேசன், ரவி, வெங்கடேசன், காசிநாதன் ஆகிய 4 மகன்களும், மகாலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.

இவர்கள் அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. இதில் வெங்கடேசன், செஞ்சியை சேர்ந்த பிரேமலதாவை கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சொந்த வேலை

சொந்த வேலை

வெங்கடேசன் சொந்த வேலை காரணமாக சில நாட்களுக்கு முன்னர் சென்னை சென்றார். இதனால் பிரேமலதா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்த நிலையில் வெங்கடேசனின் சகோதரரான காசிநாதன் நேற்று முன் தினம் வீட்டிற்கு வந்தார். அப்போது திடீரென பிரேமலதாவை கத்தியால் சரமாரியாக குத்திக் கொன்றார்.

ராமநத்தம் போலீஸ்

ராமநத்தம் போலீஸ்

இதையடுத்து அவர் ராமநத்தம் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். இதையடுத்து காசிநாதனை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் அவர் அளித்த வாக்குமூலத்தில் எனது 2ஆவது அண்ணன் ரவியின் மனைவி ராதிகா. இவர் அடிக்கடி என்னிடம் வந்து நம் குடும்பம் பிரிந்து ஆளாளுக்கு ஒரு பக்கம் வசிக்கிறோம்.

பிரேமலதா

பிரேமலதா

இதற்கு காரணம் பிரேமலதாதான். அவர்தான் குடும்பத்தை பிரித்தார் என ராதிகா என்னிடம் கூறினார். இதனால் எனக்கு பிரேமலதா மீது கோபம் வந்தது. உடனே குடும்பத்தை பிரித்த பிரேமலதாவை குத்தி கொலை செய்ய முடிவு செய்தேன். அதன் படி காத்திருந்த போது அண்ணன் வெங்கடேசன் ஊரில் இல்லை என்பதும் சென்னை சென்றுள்ளதும் தெரியவந்தது.

சந்தர்ப்பம்

சந்தர்ப்பம்

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அண்ணனின் வீட்டிற்கு சென்றேன். அப்போது பிரேமலதாதான் என்னை வரவேற்றார். அவரிடம் அண்ணன் இல்லையா என கேட்டேன், அதற்கு அவர் சென்னை சென்றுள்ளார் என்றார். எனவே அண்ணன் இல்லை என்பதை மீண்டும் ஒரு முறை உறுதி செய்து கொண்டேன்.

தண்ணீர்

தண்ணீர்

அப்போது எனக்கு தண்ணீர் கொண்டு வர போனார். உடனே நான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை குத்திவிட்டேன். அப்போது ஒன்றும் புரியாமல் சரிந்த அவரிடம் என் குடும்பத்தை பிரித்தால் நான் சும்மா விடுவேனா, சாவு என கூறி நன்றாக குத்தினேன். அவர் இறந்துவிட்டார் என்பதை உறுதி செய்தவுடன் அங்கிருந்து கிளம்பி காவல் நிலையத்தில் சரணடைந்தேன் என்றார். கொலை செய்த காசிநாதனை போலீஸார் கைது செய்த நிலையில் அவரது வாக்குமூலத்தின் படி அவரது இன்னொரு அண்ணி ராதிகா அதாவது பிரேமலதா குடும்பத்தை பிரிக்கிறார் என காசிநாதனிடம் போட்டுக் கொடுத்தவரை போலீஸார் விசாரிப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+